ETV Bharat / state

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: நீலகிரியில் உறைபனி எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Rain predicted in TN: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 4:01 PM IST

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகத்தின் மாறுபாடு காரணமாக வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று(ஜன.27) லேசான மழை பெய்யக்கூடும் என்றும் இதர தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், ஜன.28 பொறுத்தவரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

ஜன.29 பொறுத்தவரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஜன.30 மற்றும் ஜன.31 பொறுத்தவரையில் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பிப்.01 மற்றும் பிப்.02 பொறுத்தவரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

உறைபனி எச்சரிக்கை: ஜன.27 மற்றும் ஜன.28 தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு(சென்டிமீட்டரில்) மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தரங்கம்பாடி கடல் அலையில் சிக்கி மணமகன், சிறுவன் பலி.. நிச்சயதார்த்த முடிந்த கையோடு நிகழ்ந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.