ETV Bharat / state

"நான் பணம் தரமாட்டேன்.." - அண்ணாமலை பேச்சு! - Annamalai Campaign

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 3:35 PM IST

BJP Leader Annamalai election campaign: மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் 100 நாட்கள் அல்லது 200 நாட்களில் நிறைவேற்றப்படும் என தனது முதல் நாள் திறந்த வெளி பிரசாரத்தில் கோவை நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

திருப்பூர்: கோவை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் அடுத்த மாதப்பூர் பகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக, மாதப்பூருக்கு வந்த அண்ணாமலைக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொட்ர்ந்து மக்களிடம் பேசிய அண்ணாமலை, "ஒரு பெரிய மாற்றத்திற்காக அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறோம். நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தில், பிரதமர் மோடி வந்த தொகுதியில் இருந்து பிரசாரத்தை துவங்குகிறோம்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியில் அமரும்போது, இப்பகுதியில் உள்ள நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் போட்டியிடுகிறேன். நம்முடைய பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், மத்திய அரசிடம் தொலைபேசி மூலம் உடனடியாக பேசக்கூடிய ஒரு உறுப்பினர் இங்கு இருக்க வேண்டும்.

அடுத்த ஐந்தாண்டு காலம் ஆட்சியின் போது, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும். குறிப்பாக, மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் சேவைகள் அனைத்தும் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகச் சென்றடைய வேண்டும்.

இதற்காக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நம்முடைய அலுவலகம் இருக்கும். 500 இடத்தில் இ-சேவை மையம் திறக்கப்படும். கடந்த இரண்டு நாட்களாக 13 தொகுதிகளில் பிரசாரத்தை முடித்துவிட்டு இங்கு வந்துள்ளேன். அனைத்து தொண்டர்களும் நேரடியாக மக்களிடம் சென்று மோடி ஐயாவுக்கு வாக்கு சேகரிக்க வேண்டும்.

மேலும், பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் ஒரே ஒரு மத்திய அரசின் மோடி மருந்தகம் மட்டுமே இருக்கிறது. நாம் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, 100 நாட்களில் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் ஐந்து மருந்தகங்கள் கொண்டு வரப்படும். எல்லா திட்டங்களும் 100 நாட்கள் அல்லது 200 நாட்களில் நிறைவேற்றித் தரப்படும்.

இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை எல்லாம் சுத்தப்படுத்தி, ஆழப்படுத்தி, அதிலிருந்து ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் அமைத்து, வீடுகளுக்கு குடிநீர் கொண்டு செல்ல வேண்டும். மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு நாள் கூலி 174 ரூபாயாக இருந்தது. தற்போது, பிரதமர் மோடி ஆட்சியில் 319 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

விரைவில் 500 ரூபாய்க்கும் வந்துவிடும். பிரதமர் மோடி மட்டும் 400 சீட்டுகளுக்கு மேலாக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் அமரப் போகிறார். நிறைய திட்டங்கள் கொண்டு வந்து வளர்ச்சிகளைக் கொண்டு வர வேண்டும். உங்களுக்காக நான் என்னுடைய உழைப்பை கொடுக்கின்றேன். ஆனால் யாருக்கும் பணம் கொடுக்கப் போவதில்லை.

இதையும் படிங்க: 'பாஜகவில் உள்ள ரவுடிகளின் பட்டியல் ரெடி! உச்சக்கட்ட பயத்தில் மோடி' - மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.