சென்னை: கொரட்டூரில் உள்ள அலையன்ஸ் தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் குறும்பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டில், ஹைதராபாத் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (பிப்.8) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர் எனக் கூறப்படுகிறது. மேலும், ஆவடி பகுதியிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி, நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: திருவாரூர் மத்திய பல்கலை. துணைவேந்தர் கிருஷ்ணன்