ETV Bharat / state

மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை.. தென்காசியில் நடந்தது என்ன? - husband and wife death in tenkasi - HUSBAND AND WIFE DEATH IN TENKASI

Husband and wife death in tenkasi: தென்காசியில் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

THIRUVENGADAM POLICE
Husband and wife death in tenkasi
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 1:04 PM IST

தென்காசி: கீழத் திருவேங்கடம் அருகே காணவர் - மனைவி தகராறில், மனைவியை அடித்துக் கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து திருவேங்கடம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தென்காசி மாவட்டம் கீழத் திருவேங்கடம் தெற்கு பாறைப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் திருவேங்கடம் பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சீதாலட்சுமி. கருப்பசாமி வழக்கம் போல் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) இரவு இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சிணையின் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கருப்பசாமி தனது மனைவி சீதாலட்சுமியை அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் திருவேங்கடம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருப்பசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, இறந்த சீதாலட்சுமியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்த காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் கீழ்க்கண்ட சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்ணுக்கு அழையுங்கள்..

  • சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் - 044-24640050
  • மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் - 104

இதையும் படிங்க: லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி.. தெலங்கானாவில் நிகழ்ந்த சோகம்! - Telangana Accident

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.