ETV Bharat / state

தற்கொலைக்கு முயன்ற கணவர்; அதிர்ச்சியில் மனைவி எடுத்த விபரீத முடிவு.. சேலத்தில் நடந்தது என்ன? - Salem couple suicide - SALEM COUPLE SUICIDE

Salem Couple Suicide Issue: குடும்பத் தகராறில் கணவர் தற்கொலை முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை வளாகத்திலேயே மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர்
தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 11:54 AM IST

சேலம்: தாராமங்கலம் அருகே உள்ள தொட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன்(23), இவர் தோப்பூர் பகுதியில் துரித உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். மேலும், கடந்த 1 வருடங்களுக்கு முன்னர், பூக்கார வட்டம் பகுதியைச் சேர்ந்த உறவினர் மகளான மேகாலா(21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், மனமுடைந்த பூபாலன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக பூபாலனை மீட்டு, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பூபாலனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இதற்கிடையே, பூபாலனது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், இனி அவர் பிழைக்க வாய்ப்பில்லை எனவும் மேகலாவிடம் மருத்துவர்கள் கூறியதாகவும், இதனால் மனமுடைந்த மேகலா மருத்துவமனை வளாகத்திலேயே தற்கொலை செய்துகொண்டார்.

இதையும் படிங்க: தன்னுடன் வாழ மறுத்த திருமணமான பெண்ணை வெட்டி கொலை செய்த நபர்.. பரமக்குடி அருகே பகீர் சம்பவம்!

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மேகலாவின் இந்த நிலைக்கு மருத்துவர்கள் தான் காரணம் எனவும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தற்கொலை செய்துகொண்ட மேகலாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதனால், உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.

தற்கொலைக்கு முயன்று தீவிர சிகிச்சை பெற்று வந்த பூபாலன், சிகிச்சை பலனின்றி நேற்று(ஜூன் 23) காலை உயிரிழந்தார்.

தற்கொலை தடுப்பு உதவி எண்
தற்கொலை தடுப்பு உதவி எண் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் தங்கையை வாயிலேயே வெட்டிய அண்ணன்.. சென்னையில் பயங்கரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.