சென்னை: பென்சில்களை உபயோகப்படுத்தாமல் யாரும் வந்திருக்க முடியாது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு பென்சில் என்றால் தனி பிரியம் தான். ஜீம் பூம் பா பென்சில், பொம்மை பென்சில், ரப்பர் வைத்த பென்சில், கலர் பென்சில் உள்ளிட்ட புதுப்புது பென்சில்களை போட்டி போட்டு வாங்கி, இரண்டே நாள்களில் தொலைத்து விட்டு மீண்டும் புது பென்சில் கேட்கும் பள்ளிப்பருவமே தனி சுகம் தான். அதுவும் மெக்கானிக்கல் பென்சில் என்றால் கூடுதல் அலப்பறை தான். அப்படி 90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டான மெக்கானிக்கல் பென்சில்களின் வரலாற்றை தான் இத்தொகுப்பில் பார்க்க போகிறோம்.
பென்சில் வரலாறு: பென்சில்கள் 16ஆம் நூற்றாண்டின் முன்பகுதியில் கண்டறியப்பட்டது. கிராஃபைட் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் தான் பென்சில்களும் உருவாக்கப்பட்டன. 1565-ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரும் நூலாசிரியருமான கான்ராட் கெஸ்னர் என்பவரால் தான் பென்சில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பென்சில்கள் வெறும் கிராஃபைட் குச்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கிராபைட் குச்சிகள் ஊசியாக இருக்கும், பின்னர், அவை கூர்மைப்படுத்தக்கூடிய வகையில் மரத்தால் வடிவமைக்கப்பட்டது. பின்னர் மரத்தால் செய்யப்பட்ட பென்சிலில் இருந்து உலகமே உலோகத்தால் ஆன பென்சிலை உருவாக்க புதிதாக வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டது. உலோகத்தை கூர்மைப்படுத்தக்கூடிய பென்சிலுக்கு பதில் உலோகத்தை நகர்த்தும் பென்சில் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என அனைவரும் சிந்தித்தனர். அதாவது மரப்பென்சிலில் நாம் கூர்மைப்படுத்தும் போது ஒரு கட்டத்திற்கு மேல் அது தீர்ந்து போய்விடும்.
மெக்கானிக்கல் உருவான பென்சில் வரலாறு: இதனால் பொருட் செலவும், வணிக செலவும் அதிகரித்தது. பின்னர் பல முயற்சிகளுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் பின்னர் இந்த மெக்கானிக்கல் பென்சில் கண்டறியப்பட்டது. இறுதியாக 1822ஆம் ஆண்டில் சாம்ப்சன் மோர்டன் மற்றும் ஜான் ஐசக் ஹாக்கின்ஸ் ஆகியோரால் மெக்கானிக்கல் பென்சில் கண்டுபிடிக்கப்பட்டு பிரிட்டனில் காப்புரிமை வாங்கப்பட்டது. பிரிட்டனின் பல நிறுவனங்கள் மெக்கானிக்கல் பென்சில்களை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்கின. பின்னர் இந்த மெக்கானிக்கல் பென்சில் பல இடங்களுக்கு வணிகமாக்கப்பட்டது.
மெக்கானிக்கல் பென்சிலின் வகைகள்: என்னதான் டிஜிட்டல் உலகம் உருவாகிவிட்டது என்றாலும் பென்சிலின் பயன் இந்த உலகிற்கு இன்னும் தேவைப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. மெக்கானிக்கல் பென்சிலில் மொத்தம் 3 வகைகள் உள்ளன. ஒன்று Screwing வகை, இரண்டாவது Compression வகை, மூன்றாவது கிளட்ச் டைப். இதில் Compression வகை மெக்கானிக்கல் பென்சில் தான் அதிகமாக மக்களால் விரும்பப்படுகின்றன.
என்னதான் உலோகத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது என்றாலும், இதன் முக்கிய பயன்பாடு ஈயம் தான். தற்போது ஈயத்திற்கு பதில் பிளாஸ்டிக்கின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. இதனால் மெக்கானிக்கல் பென்சிலுக்கு பிளாஸ்டிக் உபயோகப்படுத்த ஆரம்பித்தனர். இந்த மெக்கானிக்கல் பென்சில் எழுதுவதற்கு பயன்பட்டாலும் இதன் முக்கியமான வேலை என்பது துல்லியமான, அதே சமயம் நுணுக்கமான கலை மற்றும் குறிப்புகளை வரைவது தான்.
மேலும் இந்த பென்சிலுக்கு அடிக்கடி பென்சில் துருவியை(Sharpner) தேட வேண்டிய அவசியம் இல்லை. இவற்றை உணரும் விதமாகவே ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ஆம் தேதி தேசிய மெக்கானிக்கல் பென்சில் தினம் அனுசரிக்கப்படுகிறது. மைக்ரோ டிப் பென்சில், தானியங்கி பென்சில், வரைவு பென்சில், தொழில்நுட்ப பென்சில், வரைதல் பென்சில், கிளிக் பென்சில், பம்ப் பென்சில், லீட்ஹோல்டர், ப்ரொபெல்லிங் பென்சில், பேனா பென்சில், மற்றும் ஈய பென்சில் இவை எல்லாம் மெக்கானிக்கல் பென்சிலுக்கு வெவ்வேறு நாட்டுக்காரர்கள் வைத்த பெயர்களாகும். இந்த பெயர்களை வைத்துதான் அந்த நாட்டவர்கள் பென்சிலை வணிகத்திற்காக விளம்பரப்படுத்தினர்.
Pentel, Pilot, Tombow, Uni-ball and Zebra of Japan, ஜெர்மனியின் ஃபேபர்-காஸ்டெல், லாமி, ரோட்ரிங் மற்றும் ஸ்டேட்லர், செக் குடியரசின் கோஹ்-இ-நூர் ஹார்ட்முத், பிரான்சின் Bic, தென் கொரியாவின் மோனாமி, அமெரிக்காவின் பேப்பர்மேட் மற்றும் பார்க்கர், சுவிட்சர்லாந்தின் காரன் டி ஆச்சே மற்றும் எராளமான கம்பெனிகள் மெக்கானிக்கல் பென்சிலை இன்று உற்பத்தி செய்கின்றனர். மெக்கானிக்கல் பென்சிலை மெக்கானிக்கல் இன்ஜினியரை விட சிவில் இன்ஜினியர்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க: சிலம்பத்திற்கு இப்படி ஒரு வரலாறா? எகிப்திற்கு சிலம்பம் சென்றது எப்படி? சிலிர்ப்பூட்டும் தகவல்கள்! - History of Silambam