சென்னை: சென்னை கிண்டியில் 116.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 'தேசிய முதியோர் நல மருத்துவமனையை' பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். இந்தியாவிலேயே முதியோருக்காகத் திறக்கப்பட்ட முதல் மருத்துவமனை இதுவாகும்.
இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். இந்த மருத்துவமனையில் உள்ள அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இந்தச் செய்தியில் காண்போம்.
தரை தளம்: உதவி மையம், முதியோர் மருத்துவம் பெண்கள், பிறநோயாளிகள் பிரிவு, ஆய்வகம், இரத்த வங்கி,
அவசரச் சிகிச்சைப் பிரிவு, மருந்து கிடங்கு. முதியோர் மருத்துவம் ஆண்கள், புறநோயாளிகள் பிரிவு, எலும்பியல் மருத்துவம், இசிஜி, சிறுநீரக மருத்துவப் பிரிவு. சிறுநீரக அறுவைசிகிச்சை பிரிவு, இதய மருத்துவப் பிரிவு, கண் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவை தரைதளத்தில் அமைந்துள்ளது.
சிகிச்சைப் பிரிவுகள்: பொது மருத்துவம், நரம்பியல், மருத்துவம்,குடல் இரைப்பை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம். பல் சிகிச்சைப் பிரிவு, ஆண்கள் அறுவை சிகிச்சை மருத்துவம். சிறு அறுவை சிகிச்சை மையம். உள்நோக்கியியல் மருத்துவம்.
ஊடுகதிர் நிழற்படம், கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு. மத்திய ஆய்வகம், மனநலம் மருத்துவம், உடலியலாக்க மற்றும் புனர்வாழ்வு மருத்துவப் பிரிவு, இயன்முறை மருத்துவம், மைய தொற்று நீக்கியல் துறை, மயக்கவியல் துறை, நவீன அறுவை சிகிச்சை அரங்கம், இரத்த சுத்திகரிப்பு பிரிவு.
உயர் அவசர நோய் குறைப்பு வார்டு, நிர்வாகத் துறை நூலகம், கருத்தரங்கு கூடம், முக்கிய பிரமுகர் காத்திருக்கும் அறை, ஆயுஷ் மருத்துவம். தீவிரச் சிகிச்சை மருத்துவம். உணவகம். கட்டண வார்டு (20 அறைகள்)
ஆண்கள் மருத்துவ வார்டு. பெண்கள் மருத்துவ வார்டு மருத்துவ ஆக்ஸிஜன் இணைப்பு அறை, மருத்துவக் கழிவு அறை ஆகியவை உள்ளன.
இக்கட்டடத்தில் 8 மின்தூக்கி , சாய்வு தளம், முழு அறை களன்கள், தீயணைப்பு உபகரணங்கள், மருத்துவத் திரவ ஆக்ஸிஜன் இணைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு, அனைத்துத் தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம் மற்றும் பொதுக் கழிப்பிடம் போன்ற பிற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரள பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா! ஆயிரக்கணக்கான பெண்கள் சாமி தரிசனம்!