ETV Bharat / state

பழனியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு நிபந்தனையுடன் அனுமதி - மதுரைக் கிளை உத்தரவு! - Madurai High Court Bench - MADURAI HIGH COURT BENCH

பழனி அடிவாரம் பாதவிநாயகர் கோயிலில் தொடங்கி கிரிவலப் பாதை வழியாக சென்று சண்முகா நதியில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி கோரிய வழக்கில், நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கோப்புப்படம்
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 11:15 AM IST

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பழனி, சக்தி சங்கமம் சார்பில் ஸ்ரீதர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் சக்தி சங்கமம் என்ற அமைப்பின் உறுப்பினராக உள்ளேன். நாங்கள் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவினை நடத்தி வருகிறோம்.

அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை ஊர்வலமானது பழனி அடிவாரம் பாதவிநாயகர் திருக்கோயிலில் சம்பர்தாய முறைப்படி பூஜைகள் முடித்து விட்டு அங்கிருந்து விநாயகர் சிலை ஊர்வலமான தொடங்கி, கிரிவலப் பாதை வழியாக சுற்றி இறுதியில் சண்முகா நதியில் விநாயகர் சிலைகளை கரைப்பது வழக்கம்.

எனவே வழக்கம்போல இந்த ஆண்டும் விநாயகர் சிலை ஊர்வலத்தை வருகிற 13ஆம் தேதி முதல் அதற்கு மறுநாள் 14ஆம் தேதி வரை பழனி அடிவாரம் பாதவிநாயகர் திருக்கோயிலில் தொடங்கி கிரிவலப் பாதை வழியாக சென்று சண்முகா நதியில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி அளித்து, அதற்கான உரிய காவல்துறை பாதுகாப்பையும் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இதையும் படிங்க: செப். 15 இல் விநாயகர் சிலைகளை கரைக்க 4 இடங்களில் அனுமதி! - சென்னை காவல்துறை அறிவிப்பு

இந்த மனு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் பழனியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி கோரி புதிதாக, பழனி துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க வேண்டும். அந்த மனுவின் அடிப்படையில், விதிமுறைகளை வகுத்து 12ஆம் தேதிக்குள் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்.

மேலும், பழனி கிரிவலப் பாதையில் ஏற்கனவே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால், விநாயகர் சிலைகளை கிரிவலப் பாதையில் வாகனங்களில் கொண்டு செல்லக் கூடாது என்று கூறி வருகிற 13ஆம் தேதி மாலை ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.