ETV Bharat / state

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மறுவாழ்வு வழங்க கோரிய வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்! - Manjolai workers rehabilitation - MANJOLAI WORKERS REHABILITATION

Manjolai workers seeking rehabilitation: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகளை வழங்க உத்தரவிட கோரிய வழக்கில், 25 சதவீதம் தொகை வழங்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள தொகை தொழிலாளர் நலத்துறையின் உதவி இயக்குனரிடம் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் பிபிடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு
உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 10:57 PM IST

மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மாஞ்சோலையை சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, வைகை ராஜன், பாபநாசம், சந்திரா ஆகியோர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த விசாரணையின் போது தமிழக அரசுத்தரப்பில், "மாஞ்சோலை மக்களுக்கு திறன் மேம்பாட்டுப்பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. TANTEA நிர்வாகத்தால் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த இயலாது" என அறிக்கை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "மாஞ்சோலை பகுதி மக்களை பார்ப்பதற்காக செல்லும் வழக்கறிஞர்களை அனுமதிப்பதில்லை" என தெரிவிக்கப்பட்டது.

அதோடு வலுகட்டாயமாக ஓய்வு பெறும் ஆவணங்களில் கையெழுத்து பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பிபிடிசி நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "534 பேர் முன்கூட்டிய ஓய்வை ஏற்றுக் கொண்டுள்ளனர். அது சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது.

ஏற்கனவே 25 சதவீதம் தொகை வழங்கப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள தொகை நாகர்கோவில் தொழிலாளர் நலத்துறையின் உதவி இயக்குநர் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது" என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தும், அன்றைய தினம் விரிவான வாதத்தை முன்வைக்கலாம் என குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தார் சாலை அமைக்கும் பணிக்கான நிதி கையாடல் வழக்கு; அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.