டெல்லி: 18வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள 102 தொகுதிகளில் நேற்று (ஏப்ரல் 19) நடைபெற்றது. இந்த நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்புதலுடன், இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது.
இதில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில், மயிலாடுதுறை தொகுதியில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த ஆர்.சுதா போட்டியிட்டார். ஆர்.சுதா தேர்தலில் போட்டியிட்டதன் காரணமாக, தற்போது தமிழ்நாட்டில் மகிளா காங்கிரஸ் புதிய தலைவராக ஹசீனா சையத் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேரளாவில் அடுத்தடுத்து போலி வாக்குப்பதிவு சம்பவம்! தேர்தல் அலுவலர்கள் பணியிடை நீக்கம்! என்ன நடக்கிறது? - Lok Sabha Election 2024