ETV Bharat / state

“உதயநிதியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்”- எச்.ராஜா காட்டம்!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர், தற்போது ஏன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை டிஸ்மிஸ் செய்யவில்லை என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

எச். ராஜா, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
எச். ராஜா, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2024, 7:16 PM IST

Updated : Oct 27, 2024, 7:56 PM IST

கரூர்: கரூர் பாஜக மாவட்ட அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று காலை நடைபெற்றது. இந்த முகாம் பாஜக கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

விசிக ஒரு வன்முறை அமைப்பு: இந்த முகாமை தொடந்து செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா கூறுகையில், “தமிழகத்தைப் பொறுத்தமட்டில், விடுதலை சிறுத்தைகள் என்ற அமைப்பு ஒரு வன்முறை அமைப்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூரில் பாஜக பொதுக்குழுவை எதிர்த்து, பாஜக நிர்வாகிகளை தாக்க விசிகவினர் முற்பட்டனர். நேற்று கூட கரூரில் ஒரு செல்போன் கடையில், இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டிருப்பதாகக் கூறி விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. விசிக மது ஒழிப்பு மாநாட்டில் மது உற்பத்தி செய்யும் ஆலை உரிமையாளர்களை வைத்துக்கொண்டு மது ஒழிப்பு மாநாட்டை நடத்தினர்.

எச். ராஜா பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

தமிழ்தாய் வாழ்த்து விவகாரம்: சமீபத்தில் தமிழக ஆளுநர் கலந்து கொண்ட பொதிகை தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுது ஒரு வார்த்தை விடுபட்டு விட்டது. இதனைக் கண்டிக்க தமிழக முதல்வருக்கு உரிமை உண்டு. ஆனால், தமிழக ஆளுநர் மீது இனவாத விரோதப்போக்கு காட்டுவதாக கூறும் குற்றச்சாட்டுகளை கடுமையாக எதிர்க்கிறோம். தற்போது தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்பட்டுள்ளது. இதை ஏன் முதலமைச்சர் கண்டிக்கவில்லை? தற்போது துணை முதல்வரை டிஸ்மிஸ் செய்வாரா? உதயநிதியைப் போல ஒரு தரம் கெட்ட அரசியல்வாதி தமிழகத்தில் யாரும் இல்லை.

இதையும் படிங்க: உலக புகழ் பெற்ற பிரான்ஸ் தேசிய நூலகத்தை பார்வையிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!

ஆங்கிலேயர்களை நாடாளச் சொன்னவர்கள் திமுக: 1944 மாநாட்டில் திமுக இந்திய தேசத்திற்கு எதிராக ஆங்கிலேயர்கள் வெளியேறக்கூடாது. லண்டனிலிருந்து ஆங்கிலேயர்கள் தமிழகத்தை ஆளலாம் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தேச துரோகப் போக்கை நாடறியும். இதுபோன்ற ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை, தேசத்திற்கு விரோதமாக செயல்பட்டவர்களை அரசியலில் இருந்து மக்கள் அப்புறப்படுத்த வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உதவும் அமைப்பு: ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் இன்று பல்வேறு தேசியப் பேரிடர்களில் நேரடியாக களத்தில் இறங்கி சேவை செய்கிறது. சமீபத்தில் கவரைப்பேட்டை ரயில் விபத்தில் கூட எந்த திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் காங்கிரஸ் சேவா தளத்தைச் சேர்ந்தவர்களும் மக்களை மீட்க வரவில்லை. களத்தில் இருந்துவர்கள் ஆர்எஸ்எஸ் சேவாதளம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

விஜய் மாநில மாநாடு: புதிய கட்சி மாநாடு நடத்தும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். அவர் கட்சியின் கொள்கைகளை பொதுமக்களுக்கு முதலில் தெரிவிக்கட்டும். பின்னர் அது குறித்து விமர்சனங்களைத் தெரிவிக்கலாம். அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் சந்திப்பு நடைபெறுவது வழக்கம். சீமான் ஒரு பொழுதுபோக்கு நபர், அவர் கூறுவதைக் கேட்டு சிரித்து விட்டு, அதை விட்டுவிட வேண்டும்.

கோயில் தரிசனத்திக்கு கட்டணமில்லா இயக்கம்: பாஜக மாநில அமைப்பு தேர்தல் நிறைவடைந்த உடன் கோயில்களில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து கட்டணமில்லா கோயில் தரிசனம் கொண்டு வர ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை பாஜக தொடங்க இருக்கிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Oct 27, 2024, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.