ETV Bharat / state

சிபிஐ அதிகாரி போல் பேசி அரசு மருத்துவரிடம் ரூ.36 லட்சம் மோசடி.. சேலத்தில் பரபரப்பு! - Govt doctor scammed - GOVT DOCTOR SCAMMED

Government doctor scammed in Salem: சிபிஐ அதிகாரி போல பேசி சேலம் அரசு மருத்துவரிடம் 36 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சைபர் கிரைம் தொடர்பான கோப்புப்படம்
சைபர் கிரைம் தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 5:47 PM IST

சேலம்: சேலம் கருங்கலுக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவரின் செல்போனுக்கு கடந்த மாதம் 10ஆம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தான் சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி புதிய சிம்கார்டு வாங்கி உள்ளதாகவும், அதனை பயன்படுத்தி ஆள் கடத்தல் மற்றும் பண மோசடி உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பேசிய அந்த மர்ம நபர், ஆதார் எண் மற்றும் தங்களது வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும் எனவும், அதனை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும் படியும் கூறியுள்ளார். அதன்பின்னர் மருத்துவரும், தனது ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், மருத்துவரின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தான் சொல்லும் கணக்கில் செலுத்துமாறும், ஆவணங்கள் சரிபார்த்த பின்னர் திரும்ப அனுப்பப்படும் என மருத்துவரிடம் மர்ம நபர் பேசி உள்ளார். இவற்றை நம்பி, அந்த மர்ம நபர் கொடுத்த மூன்று வங்கிக் கணக்குகளுக்கு, அரசு மருத்துவர் பத்து முறையாக 36 லட்சம் ரூபாய் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர், சில நாட்களுக்குப் பிறகு பணத்தை அனுப்பக் கூறிய நபரை மருத்துவர் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, செல்போனில் பேசிய நபர் சிபிஐ எனக் கூறி பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர், சேலம் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மருத்துவர் எந்தெந்த வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி வைத்தார், அவரிடம் சிபிஐ அதிகாரி என பேசிய மர்ம நபர் யார் என்பது குறித்து சேலம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரயில் டிக்கெட் புக்கிங்கில் புதிய விதிமுறைகளா?- ஐஆர்சிடிசி விளக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.