ETV Bharat / state

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயின்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு.. நாமக்கல்லில் நடந்தது என்ன? - Namakkal Girl death

Girl mysterious death in Namakkal: நாமக்கல் அருகே தனியார் ஹோட்டலில் பயிற்சியில் இருந்த சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து, நியாயமான முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 7:59 PM IST

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர், அம்மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், அவர் படித்து வந்த கல்லூரி சார்பாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்கு 3 மாத பயிற்சிக்கு அப்பெண் அனுப்பப்பட்டுள்ளார்.

அங்கு சில மாணவிகளுடன், இவர் தங்கி பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமி இரவு நேரத்தில் அந்த ஹோட்டலில் உள்ள கழிவறையில் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதனை அடுத்து, ஹோட்டல் ஊழியர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக செம்மேட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர், சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே, சிறுமியின் மரணம் குறித்து தகவல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மாவட்ட காவல்துறை இந்த விவகாரத்தில் நியாயமாகவும், நேர்மையாகவும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, உடலை பெற மறுப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: அரக்கோணத்தில் ரேபிஸ் நோய் பாதிப்பால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.