ETV Bharat / state

வளர்ப்பு நாயால் அச்சுறுத்தல்.. மதுரவாயிலில் நாய் உரிமையாளரின் வீடு முற்றுகை - Public panic due to dogs in Chennai

Protest Against breeders German Shepherd dogs in Chennai: சென்னை மதுரவாயல் பகுதியில், ஜெர்மன் ஷெப்பர்ட் என்ற அபாயகரமான நாய்கள் வளர்க்கப்படுவதாக, ஒருவரின் வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Public panic due to stray dogs in Chennai
சென்னையில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வளர்க்க பொதுமக்கள் எதிர்ப்பு (Photo Credits: ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 8:39 AM IST

சென்னையில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வளர்க்க பொதுமக்கள் எதிர்ப்பு (Video Credits: ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்த விவகாரம், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் உரிய ஆவணங்கள் இன்றியும், அபாயகரமான நாய்களை வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி ஆபத்தான நாய்கள் வளர்பவர்களைக் கண்டால் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை மதுரவாயல் பகுதியில் ஜான்சன் என்பவர் ஜெர்மன் ஷெப்பர்ட் ( German Shepherd dogs) உள்ளிட்ட 5 வகை வெளிநாட்டு இன நாய்களை சட்டவிரோதமாக வளர்த்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அவர் வளர்க்கும் நாய்கள் அபாயகரமானவை என்றும், அவைகள் இரவு நேரத்தில் அதீத சத்தத்துடன் குரைப்பதால் சிறியவர் முதல் முதியவர் வரை கடும் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் நீண்டநாள்களாக் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜான்சனின் வீட்டை முற்றுகையிட்டு நேற்று மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "ஜான்சன் என்பவர் நாய்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்து அவற்றை விற்பனை செய்கின்றார். மேலும், நூற்றுக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியில் இதுபோன்ற நாய்களை வளர்க்கக்கூடாது. அந்த நாய்கள் குழந்தைகளைக் கடிக்கும் அபாயம் இருக்கின்றது" என அச்சம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நாய்கள் வளர்ப்பு குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நெடுஞ்சாலையில் வாகனங்களை வழி மறித்து இடையூறு செய்த மனநலம் குன்றிய வாலிபர்! - Youth Atrocities In Highway

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.