ETV Bharat / state

வந்தே பாரத் விழாவில் மதுரையைச் சேர்ந்த 101 வயது சுதந்திரப் போராட்ட வீரர்! - freedom fighter in Vande Bharath

Madurai freedom fighter in Vande Bharath: மதுரை - பெங்களூர் கண்டோண்மென்ட் வந்தே பாரத் ரயில் சேவை ஆகஸ்ட் 28ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்ட நிலையில், இந்த விழாவில் 101 வயது சுதந்திரப் போராட்ட தியாகி அழகம் பெருமாள் கலந்து கொண்டுள்ளார்.

வந்தே பாரத் ரயில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகம் பெருமாள்
வந்தே பாரத் ரயில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகம் பெருமாள் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 4:42 PM IST

மதுரை: மதுரையைச் சேர்ந்தவர் 101 வயது சுதந்திரப் போராட்ட தியாகி அழகம் பெருமாள். இவர் மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்ததை மதுரையில் ரயில்வே கோட்டம் நினைவு கூர்ந்துள்ளது. மதுரை - பெங்களூர் கண்டோண்மென்ட் வந்தே பாரத் ரயில் சேவை (ஆகஸ்ட் 28) சனிக்கிழமை அன்று துவக்கி வைக்கப்பட்டது.

இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் ரயில்வே துறை மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் வி.சோமன்னா மற்றும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பார்வையாளர்களாக முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மேலும், பேரையூர் பகுதியில் இருந்து 101 வயதுள்ள சுதந்திரப் போராட்ட தியாகி அழகம் பெருமாளும் கலந்து கொண்டது முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது. இவர் 1924ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பிறந்தவர். 1942ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையம் எதிரே ஆகஸ்ட் புரட்சியான "வெள்ளையனே வெளியேறு" சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். இதன் காரணமா,க இவர் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள அல்லிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் ஒரு தமிழ் ஆர்வலர் ஆவார். சமீபத்தில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடந்த விழாவில் 1,330 திருக்குறளையும் ஒரு மணி 40 நிமிடத்தில் ஒப்பித்து சாதனை புரிந்துள்ளார். மேலும், திருக்குறளில் நவரசம் என்ற தலைப்பில் 120 பக்கத்தில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் மூலமாக தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ளார். திருக்குறளில் உள்ள 1,300க்கும் மேற்பட்ட பழம் தமிழ்ச் சொற்களுக்கு பொருள் பதங்களும் எழுதியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாற்றை மறைப்பதற்கு ஒரு கூட்டம் முயற்சி செய்கிறது” - செல்வப்பெருந்தகை சாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.