ETV Bharat / state

செந்தில் பாலாஜி உடல்நிலையில் முன்னேற்றம்.. ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை! - SENTHIL BALAJI - SENTHIL BALAJI

Senthil Balaji Health: நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இன்று அவருக்கு இருதயம் தொடர்பாக பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 10:53 AM IST

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சையும், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

அதன் பின் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி, உடல் நிலை சரியானதும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகவும், அதற்காக பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக வேண்டும் என மருத்துவர்கள் கூறியதைத் தொடர்ந்து, அவருக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, ஈ.சி.ஜி மற்றும் ரத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

நேற்று மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

அவருக்கு கை, கால் மரத்து போதல் பிரச்சினை இருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து, அதற்கு உரிய சிகிச்சை அளித்து, 22 நாட்களுக்குப் பிறகு மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனிடையே அவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், புழல் சிறையில் தனி வார்டில் உள்ள செந்தில் பாலாஜி, சிறை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் அவ்வபோது பரிசோதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல்நிலையில் முன்னேற்றம்: செந்தில் பாலாஜிக்கு மன அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்ததால், மருத்துவர்கள் ஈசிஜி உள்ளிட்ட அடிப்படை பரிசோதனைகள் மேற்கொண்டு, தொடர்ந்து இரண்டாவது நாளாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி அவரது உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாகவும், மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்திருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இன்று அவருக்கு இருதயம் தொடர்பாக பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: திமுகவில் எத்தனையோ மூத்தவர்கள் உள்ளனர்.. துணை முதலமைச்சர் விவகாரத்தில் ஈபிஎஸ் தாக்கு! - Edappadi Palaniswami

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.