ETV Bharat / state

தேமுதிக, அதிமுக கூட்டணியில் இடம் பெறுமா?... முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 19, 2024, 10:48 PM IST

Updated : Mar 19, 2024, 10:57 PM IST

Former ADMK Minister KP Munusamy: தேமுதிக, அதிமுக கூட்டணியில் இடம் பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என முன்னாள் அதிமுக அமைச்சர் முனுசாமி கூறியுள்ளார்.

தேமுதிக, அதிமுக கூட்டணியில் இடம் பெறுமா
தேமுதிக, அதிமுக கூட்டணியில் இடம் பெறுமா

திருச்சி: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டனர். இந்நிலையில், வருகிற 24ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார்.

வரும் 24ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், மேடை ஏற்பாடு பணிகளை கே.பி.முனுசாமி, எஸ்.பி‌.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, செய்தியாளர்களிடம் பேசுகையில், "அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், வரும் 24ஆம் தேதி, 40 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளனர்.

தேமுதிக, அதிமுக கூட்டணியில் இடம் பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். பிரதமர் மோடி கோவையில் பங்கேற்று நடந்த பேரணியில், மாணவர்களைப் பயன்படுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது என்ற கேள்விக்கு, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிவித்தார்.

இப்போது, ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசும் பிரதமர் மோடி, அந்த கட்சியின் மாநிலத் தலைவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மட்டுமின்றி அண்ணாதுரை போன்றவர்களையும் இகழ்ந்து பேசிய போது, ஏன் கண்டிக்கவில்லை. திருச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

அதிமுக கூட்டணிக்கு வருவதாகப் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு, திடீரென கூட்டணி மாறிய பாமகவுக்கு தர்மம் நல்ல பதிலை கொடுக்கும். மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான தேர்தலாக இருப்பதாலும், தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்க வேண்டி இருப்பதாலும், திமுக ஆட்சியில் மக்கள் படும் அவதிகளையும் எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்வோம்.

ஒரு பலமான இயக்கத்திற்கு, கூட்டணி தேவைப்படும் நேரத்தில் ஏற்றுக் கொள்வோம். கூட்டணியில் சேர விரும்பாத பட்சத்தில், எங்கள் பலத்தையே வைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடுவது தான் அதிமுக வரலாறு. பல தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து இருக்கிறோம்.

'எந்தக் காலத்திலும், எந்த காரணத்துக்காகவும் கட்சி அழிவதற்குத் துணையாக இருக்க மாட்டேன்' என்று கூறிய பன்னீர்செல்வம், அதிமுக சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்து இருப்பதால், 'எங்களுக்குக் கிடைக்காவிட்டால், அந்த சின்னத்தை முடக்குங்கள்' என்று கூறுகிறார். இதிலிருந்தே அவர் எவ்வளவு பெரிய சுயநலவாதி என்று தெரிகிறது.

அதிமுக ஆட்சியால் தான் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. தேர்தல் முடிவுக்குப் பின், யார் யாரோடு மோதி வெற்றி பெற்றனர் என்பது தெரியும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? - பாஜகவின் திருச்சி சூர்யா அளித்த விளக்கம்!

Last Updated : Mar 19, 2024, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.