தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட மலை கிராமங்களில் உள்ள சாலைகளில் 20க்கும் மேற்பட்ட பழங்கால கார்களில் வெளிநாட்டினர் சுற்றுலா வந்தனர். போர்ச்சுக்கல், பிரான்ஸ், பின்லாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 52 சுற்றுலாப் பயணிகள் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரையில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்க்க இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
இதையும் படிங்க: "அரிட்டாபட்டி கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்"-மத்திய அமைச்சரிடம் சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்!
அவர்கள் அனைவரும் தங்கள் நாட்டிலிருந்து நூறு ஆண்டுகள் பழமையான பெண்ட்லி, ஜாகுவார், போர்சே, ஆஸ்டின் ஹீலி மாடல் கார்களை கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு அந்தக் காரில் கோவாவில் ஆரம்பித்து கர்நாடகா, ஆந்திரா வழியாக கேரளா சென்று மீண்டும் தேனி மாவட்டம் வழியாக சென்னைக்கு சென்றனர்.
முன்னதாக தேனி மாவட்ட மலைச்சாலைகளில் 100 ஆண்டுகள் பழமையான கார்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் சென்றனர். மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் பழமையான கார்கள் உலா வந்ததால் அப்பகுதி பொதுமக்கள் வெளிநாட்டு கார்களை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்