ETV Bharat / state

வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்கள்.. ஜெட் வேகத்தில் எகிறிய விமான கட்டணம்! - chennai FLIGHT TICKET HIKE - CHENNAI FLIGHT TICKET HIKE

Flight Ticket Hike: சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் இன்று பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளதால் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 12:55 PM IST

சென்னை: நாட்டில் 18-வது நாடாளுமன்ற மக்களவைத்தேர்தல் ஏப்.19 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாளை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. ஆகவே, மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்கள், பெரிய சிறிய வர்த்தக நிறுவனங்கள் போன்றவைகளில் பணி புரியும் அனைவருக்கும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விமான கட்டணம்
விமான கட்டணம்

இதை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வேலை பார்க்கும் வெளியூர் வாசிகள், குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்காக, சொந்த ஊர் புறப்பட்டு செல்கின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் இரயில்கல் இயக்கப்பட்டிருந்தாலும், அதில் சீட்கள் கிடைக்காததாலும், ஒரே நாள் விடுமுறையில் சொந்த ஊர் சென்று திரும்ப வேண்டியது சூழ்நிலை இருப்பதாலும், ஏராளமானவர்கள் அவசர அவசரமாக விமானங்களில் புறப்பட்டு செல்கின்றனர்.

இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் இன்று பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக இன்று மாலை, இரவு செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பயணிகள் கூட்டம் அதிகரித்ததை ஒட்டி வழக்கம் போல், விமான டிக்கெட் கட்டணங்களும் அதிகரித்து உள்ளன.

விமான கட்டணம்
விமான கட்டணம்
  • சென்னை - தூத்துக்குடி விமான கட்டணம் வழக்கமாக 3 ஆயிரத்து 957 ரூபாயாக இருந்த நிலையில், இன்று ரூபாய் 8 ஆயிரத்து 297 முதல் ரூபாய் 12 ஆயிரத்து 716 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
  • சென்னை - மதுரை விமான கட்டணம் வழக்கமாக 3 ஆயிரத்து 674 ரூபாயாக இருந்த நிலையில், இன்று ரூபாய் 8 ஆயிரத்து 555 முதல் ரூபாய் 11 ஆயிரத்து 531 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
  • சென்னை - திருச்சி விமான கட்டணம் வழக்கமாக 2 ஆயிரத்து 382 ரூபாயாக இருந்த நிலையில், இன்று ரூபாய் 6 ஆயிரத்து 344 முதல் ரூபாய் 8 ஆயிரத்து 507 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
  • சென்னை - கோயம்புத்தூர் விமான கட்டணம் வழக்கமாக 3 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்த நிலையில், இன்று ரூபாய் 7 ஆயிரத்து 881 முதல் ரூபாய் 8 ஆயிரத்து 616 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
  • சென்னை - சேலம் விமான கட்டணம் வழக்கமாக 2 ஆயிரத்து 433 ரூபாயாக இருந்த நிலையில், இன்று ரூபாய் 5 ஆயிரத்து 572 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வாக இருந்தாலும், தங்களுடைய சொந்த ஊர் சென்று வாக்குகளை பதிவு செய்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமான கட்டணங்கள் பற்றி கருத்தில் கொள்ளாமல், ஆர்வமுடன் பயணிகள் முன்பதிவுகள் செய்து பயணிக்கின்றனர். இந்த அளவு கட்டண உயர்வு இருந்தாலும், அனைத்து விமானங்களிலும், ஒரு சில சீட்டுகள் மட்டுமே உள்ளதால், பயணிகள் கடும் போட்டியில் முன்பதிவு செய்கின்றனர்.

விமான கட்டணம்
விமான கட்டணம்

பயணிகள் கூட்டம் அதிகம் இருப்பதால் பேருந்து, ரயில்கள் கூடுதலாக இயக்குவது போல், விமானங்களும் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, “இது பற்றி நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது. டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் அனுமதி பெற வேண்டும். மேலும் கூடுதல் விமானங்கள் இருக்கும்போது, சென்னையில் இருந்து செல்லும் போது பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த விமானங்கள் திரும்பி வரும் போது காலி விமானங்களாக வருவதால், நிறுவனத்துக்கு இழப்புகள் ஏற்படும்” என்று கூறுகின்றனர்.

இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தைத் திருமணம் தொடர்பான வழக்கு; தீட்சிதர்கள் பதிலளிக்க உத்தரவு! - Child Marriage Issue Case

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.