ETV Bharat / state

ஆர்.எம்.வீரப்பன் மறைவு; முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி! - RM Veerappan passed away - RM VEERAPPAN PASSED AWAY

R.M.Veerappan passed away: சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 98 ஆகும்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 3:09 PM IST

Updated : Apr 9, 2024, 5:25 PM IST

சென்னை: முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98. வயது மூப்பு காரணமாக இன்று (ஏப்.09) உயிரிழந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் வைத்து அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து, ஆர்.எம்.வீரப்பனின் உடல் திருமலை பிள்ளை சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அரசியல், திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, அவரது உறவினர்கள் வெளிநாட்டில் இருந்து வர வேண்டியுள்ளதால், நாளை (ஏப்.10) நுங்கம்பாக்கத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தகவல் அளித்துள்ளார்.

திரைப்பட நடிகரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் அமைச்சரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர்.

முன்னதாக, ஆர்.எம்.வீரப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம். வீரப்பன் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்.

அவரது 98வது பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி, நேரில் அவரது இல்லத்திற்கேச் சென்று அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நினைவுகள் நிழலாடுகின்றன. அரசியலில் மட்டுமின்றி, திரைத்துறையிலும் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ள ஆர்.எம்.வீரப்பன், நூறாண்டுகளும் கடந்து நிறைவாழ்வு வாழ்வார் என்ற எம் போன்ற அவரது நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பு, எதிர்பாராத விதமாக நிறைவேறாமல் போயிருப்பது வருத்தமளிக்கிறது.

ஆர்.எம்.வீ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி என அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமும், நட்பும் கொண்டிருந்தவர். எம்.ஜி.ஆரின் மனசாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பணியாற்றிப் புகழ் பெற்றவர்.

பின்னாளில், எம்.ஜி.ஆர். கழகம் என்று தமக்கென தனி இயக்கம் கண்டாலும், திராவிட முன்னேற்றக் கழகத்துடனும், கருணாநிதியுடனும் அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் நல்லுறவையும், நட்பையும் பேணி வந்தார். அதே அன்பையும், பரிவையும் என்னிடத்திலும் அவர் காட்டி வந்தார்.

எம்.ஜி.ஆரின் சத்யா மூவீஸ் நிறுவனத்தை திறம்பட நிர்வகித்து, தமிழ்த் திரையுலகிற்கு பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்த சிறந்த தயாரிப்பாளராகவும் அவர் திகழ்ந்தார். அத்துடன், அவரது தமிழ்ப் பற்று காரணமாக சென்னை கம்பன் கழகத்திற்கும் தலைவராகப் பொறுப்பேற்று, இலக்கியத் துறையிலும் தனது தடத்தைப் பதித்தார். அத்துடன், ஆழ்வார்கள் ஆய்வு மையம் என்ற அமைப்பின் தலைவராகப் பணியாற்றி, ஆன்மீகத் துறையிலும் ஈடுபாடு கொண்டவராக அவர் இருந்து வந்தார்.

அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை, ஆன்மீகம் என்று அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த ஆர்.எம்.வீரப்பன், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாகத் திகழ்ந்தார்.

ஆர்.எம்.வீரப்பன் மறைவு, அரசியல் உலகிற்கு மட்டுமின்றி, அவர் இயங்கி வந்த திரையுலகம், இலக்கியம், ஆன்மீகம் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கம் இருக்கும் வரை ஆர்.எம்.வீரப்பன் புகழும் நிலைத்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘எடப்பாடி ஐயா தான் ஜெயிக்கணும்’.. சமயபுரம் கோயிலில் தீச்சட்டி எடுத்த கஞ்சா கருப்பு! - Lok Sabha Election 2024

Last Updated : Apr 9, 2024, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.