தேனி: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் விவசாயத்தை முதன்மைத் தொழிலாக வைத்து பல ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர். தேனி கண்டமனூர் மின் மாற்றியில் இருந்து எம்.சுப்புலாபுரம் கிராமத்திற்கும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் உள்ள விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு, விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஓராண்டு காலமாக மின்சார தடை ஏற்பட்டுள்ளதால் விவசாய மோட்டார்கள் பழுதடைந்து நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது பெய்து வரும் கோடை மழையால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதன் காரணமாக தண்ணீர் வளம் இருந்தும், நீலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் இருப்பதாக கூறுகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து தேனி மின்வாரிய அலுவலகத்தில் எம்.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளரிடம் மின் இணைப்பை தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். மேலும், ஆண்டிப்பட்டி மின்மாற்றியில் இருந்து மின் இணைப்பை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: பைக்கில் சென்றபோது திடீர் தகராறு.. காதலியின் செயலால் காதலனுக்கு நேர்ந்த சோகம்! - Lover Died In An Incident