ETV Bharat / state

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்.. ஹெல்மெட்டை தலையில் அணியாமல் பைக்கில் வைத்து சென்ற விவசாயி பலி! - erode bike accident - ERODE BIKE ACCIDENT

Erode bike accident: தாளவாடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஹெல்மெட் இருந்தும் அதனை தலையில் அணியாமல் பைக்கில் மாட்டுச்சென்ற விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோட்டில் இரண்டு பைக் நேருக்கு நேர் மோதியதில் ஹெல்மெட்டை பைக்கில் வைத்து சென்ற விவசாயி பலி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 9:55 AM IST

ஈரோடு: தாளவாடி அருகே உள்ள மாதஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜண்ணா(வயது 56). விவசாயியான இவர் தாளவாடி - பனஹள்ளி சாலையில் எரஹனள்ளி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அருளவாடி கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் (வயது 44) என்பவர் ராஜண்ணா ஓட்டிச் வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதியுள்ளார்.

இந்த விபத்தில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜண்ணா உயிரிழந்தார். காயம் அடைந்த மாதேஷுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் விவசாயி ராஜண்ணா ஹெல்மெட் இருந்தும் அணியாததால் பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: சூறைக்காற்றுடன் மழை: தாளவாடியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.