ETV Bharat / state

மருத்துவ முதுகலை சீட் வாங்கித் தருவாக ரூ.20 லட்சம் மோசடி.. முன்னாள் உதவிப் பேராசிரியர் கைது! - Medical PG Seat Fraud Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 9:51 PM IST

Medical PG Seat Fraud Case: கன்னியாகுமரியில் மருத்துவருக்கு, கல்லூரியில் முதுகலை சீட் வாங்கித் தருவதாக ரூ.23 லட்சம் மோசடி செய்த முன்னாள் கல்லூரி உதவிப் பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மறவன் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆனந்த கென்னடி (60). இவர் நாகர்கோவிலில் கம்பி மற்றும் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் சுதிமா எம்பிபிஎஸ் முடித்து விட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். சுதிமாவின் மருத்துவப் படிப்புக்காக நாகர்கோவில் அடுத்த தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்த ஜான்சி (50) என்பவர் சில உதவிகளை செய்து உள்ளார்.

இந்நிலையில், மேற்படிப்புக்காக சுதிமா முயற்சி செய்து வருவதையறிந்த ஜான்சி, சுதிமாவின் தந்தை ஆனந்த கென்னடியை தொடர்பு கொண்டு மருத்துவ மேற்படிப்புக்காக உதவி செய்வதாகவும், இதற்காக ரூ.23 லட்சம் செலவாகும் என்றும், பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாகவும் தெரிவித்து உள்ளார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜான்சி தெரிவித்த தகவலின் படி, கடலூரைச் சேர்ந்த டாக்டர் ஜானகிராமன் மற்றும் அவரது தந்தை அண்ணாமலை ஆகியோர் ஆனந்த கென்னடியை தொடர்பு கொண்டனர். இவர்கள் கேட்டுக் கொண்டதன் படி, ரூ.23 லட்சத்தை ஆனந்த கென்னடி கொடுத்து உள்ளார்.

பின்னர் கல்லூரியில் சேர்ந்ததற்கான உத்தரவு நகலை வழங்கி உள்ளனர். அதை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு கொண்டு சென்ற போது அவை போலியான உத்தரவு நகல் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து ஆனந்த கென்னடி ஜான்சியிடம் கேட்டபோது, இந்த முறை உங்கள் மகளுக்கு சீட் கிடைக்கவில்லை. அடுத்த முறை கண்டிப்பாக வாங்கி தந்து விடுகிறோம் எனக் கூறி உள்ளார்.

இதனால் பணத்தை ஆனந்த கென்னடி திரும்ப கேட்டபோது, பணத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார். பின்னர், ரூ.3 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு ரூ.20 லட்சம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ஆனந்த கென்னடி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, ராஜாக்க மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி, ஜான்சி மற்றும் கடலூரைச் சேர்ந்த டாக்டர் ஜானகிராமன், அவரது தந்தை அண்ணாமலை ஆகிய மூன்று பேர் மீதும் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், ஜான்சியை போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், ஜான்சி சிதம்பரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் முன்னாள் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்தது தெரிய வந்தது. மேலும், இது போன்று வேறு யாரிடமாவது மோசடி செய்து உள்ளார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். பின்னர், கைது செய்யப்பட்ட ஜான்சியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜானகிராமன் மற்றும் அவரது தந்தை அண்ணாமலை ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : பருவமழை முன்னெச்சரிக்கை; மின் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்! - Electrical maintenance work

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.