ETV Bharat / state

"நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மோடியை எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார்" - ஈவிகேஎஸ் இளங்கோவன் - EVKS Elangovan

EVKS Elangovan: திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு இழுபறி இல்லை, சுமூகமாக நடந்து கொண்டு உள்ளது, ஓரிரு தினங்களில் எந்த தொகுதிகள் என தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படும் காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈவிகேஎஸ் இளங்கோவன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 3:18 PM IST

ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

ஈரோடு: தனியார் தினசரி நாளிதழ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள "என்றும் தமிழர் தலைவர்" என்னும் நூலின் அறிமுக விழா, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகில் உள்ள பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர்.

பின்னர் நிகழ்ச்சி மேடையில் எம்பி கணேசமூர்த்தி பேசுகையில், “தேவையான நேரத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் கூட சமஸ்கிருத வழிபாட்டு முறை உள்ளது. இதனை மாற்ற வேண்டும். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சனாதனம் வேறு, இந்து மதம் வேறு என்ற புரிதலை இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு பெரியார் தொடர்பான புத்தகங்கள் தேவையாக உள்ளன" என்றார்.

இதனைத் தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், “பெரியாரைக் குறித்து என்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் நான் அவ்வளவாக படிக்கவில்லை, இப்படி கூறுவதற்கு நான் வெட்கப்படுகிறோன். ஆனால், கடந்த 4 வருடங்களில் பெரியாரைப் பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை நான் படித்துள்ளேன். அவற்றில் என் மனம் கவர்ந்த நூலாக ‘என்றும் தமிழர் தலைவர்’ புத்தகம் அமைந்துள்ளது" என்றார்.

அதனைத் தொடர்ந்து திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் பேசும்போது, "எதிர்காலத்திற்கும் பொருத்தமாக இருக்கும் வகையில் ‘என்றும் தமிழர் தலைவர்’ என இந்த நூலுக்கு பெயர் வைத்துள்ளனர். பெரியார் குறித்து என் போன்றோர் தொகுத்து இருந்தால் கூட, இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது.

அந்த அளவுக்கு அனுபவத்துடன் இந்த நூலை உருவாக்கி உள்ளனர். இந்த நூலை வாங்குவதும், படிப்பதும்தான் பெரியாருக்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும்" என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் சண்முகம், மாநகராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ்குமார், ரவி உள்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், “திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு இழுபறி இல்லை. சுமூகமாக நடந்து கொண்டு உள்ளது. ஓரிரு தினங்களில் எந்த தொகுதிகள் என தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மோடியை எங்கு தேடினாலும் இருக்க மாட்டார். தமிழகமே தன் சொந்த பூமியாக பாஜக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்திலிருந்து வரும் வரியை மீண்டும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு கொடுக்காமலிருந்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள், காங்கிரஸை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜகவில் இணைந்து வருகிறார்கள். தமிழகத்தில் கஞ்சா குடிக்கும் பழக்கம் 100 வருடங்களாக இருந்து வருகிறது. தற்போது கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக விற்பவர்கள் பிடிபடுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் எத்தனை சமூக விரோதிகள் உள்ளார்கள் என்று பார்த்தால், பாஜகவிற்கு பிறகு அதிமுகவில்தான் அதிகமாக உள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஐஸ்கிரீம் விலை உயர்வு; ஆவின் நிர்வாகம் தரும் விளக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.