ETV Bharat / state

ஈரோட்டில் பெற்றோரை இழந்து நிர்கதியாக நிற்கும் மாற்றுத்திறனாளி.. அரசு உதவிக்கரம் நீட்ட கோரிக்கை! - Erode Disabled Person Problem - ERODE DISABLED PERSON PROBLEM

Erode Disabled Person Probelm: சாலை விபத்தில் கை, கால்களை செயலிழந்த 42 வயது மாற்றுத்திறனாளி, தன்னுடைய வேலையை தானே செய்ய முடியாத நிலையில், தாயை இழந்த துக்கம் தீர்வதற்குள் தந்தையையும் பறிகொடுத்து தவித்து வரும் இவருக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக அரசு, மாற்றுத்திறனாளி நபர்
தமிழக அரசு, மாற்றுத்திறனாளி நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 2:52 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள கோவிந்தராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி - நஞ்சம்மாள் தம்பதியினர். நெசவுத் தொழில் செய்து வந்த இவர்களுக்கு முருகன்(42) என்ற மகன் உள்ளார். தற்போது வரை திருமணமாகாத இவர் ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த விபத்தில் முருகனுக்கு தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து, எந்த வேலையும் செய்ய முடியாத தனது மகனின் நிலையைக் கண்டு பெற்றோர் மனஉளைச்சளில் இருந்து வந்துள்ளனர். மேலும், அவரது தாய் இட்லி விற்று முருகனைப் பராமரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் முருகனின் தாய் இறந்ததையடுத்து, மன வேதனையில் இருந்த தந்தையும் உடல்நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.30) உயிரிழந்துள்ளார். இதனால், வாடகை வீட்டில் ஆதரவின்றி, ஒரு வேளை உணவு கூட இல்லாமல் தனிமையில் தவித்து வருகிறார் முருகன்.

எழுந்து நடக்கக் கூட முடியால் படுத்த படுக்கையாகக் கிடக்கும் முருகனுக்கு மாற்றுத்திறனாளிக்கான உதவித் தொகையும் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், வாடகை வீட்டு உரிமையாளரும் வீட்டைக் காலி செய்ய வற்புறுத்துவதாகக் கண்ணீர் மல்கத் தெரிவிக்கிறார் முருகன்.

தற்போது உறவினர்கள் கூட உதவ முன்வராத நிலையில், தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் அவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், முருகனை அரசு காப்பகத்தில் சேர்க்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே சேர்ப்பதால், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட முருகனை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். தற்போது தாய், தந்தையை இழந்து நடக்கக் கூட முடியாமல் படுக்கையிலேயே முடங்கிக்கிடக்கும் முருகனுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: இலங்கை சிறையில் இருந்த ஏழு ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை திரும்பினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.