ETV Bharat / state

ஈரோடு ஆவின் வேனில் காலாவதியான பிஸ்கட்டுகள் பறிமுதல்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி! - Expired aavin biscuits seized - EXPIRED AAVIN BISCUITS SEIZED

Expired aavin biscuits seized: கோபிசெட்டிபாளையம் அருகே ஆவின் வேனில் கொண்டுவரப்பட்ட காலாவதியான பிஸ்கட்டுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஈரோடு உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

seized aavin biscuits Image
பறிமுதல் செய்யப்பட்ட பிஸ்கட்டுகள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 12:23 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் ஆவின் பாலகத்திற்கு சித்தோடு ஆவின் பாலக தலைமை அலுவகத்திலிருந்து விற்பனைக்காக வேனில் பிஸ்கெட்கள் கொண்டு வரப்பட்டடன. வேனில் விற்பனைக்காக கொண்டு வரும் பிஸ்கட்டுகள் காலாவதியானது என கோபி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில் கோபி பேருந்து நிலையம் அருகே காத்திருந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி குழந்தைவேலு, அந்த வழியாக வந்த ஆவின் பாலக வேனை நிறுத்தி ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வில், வேனில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட பிஸ்கட்டுகள் காலாவதியானது என தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து காலாவதியான பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்து, ஈரோடு உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்ததாக கோபி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி குழந்தைவேலு தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொடிவேரி பாசன விவசாய சங்கத் தலைவர் சுபி தளபதி கூறுகையில், "ஈரோடு மாவட்ட ஆவின் நிர்வாகம் தொடர்ந்து ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்ததாகவும், சித்தோடு ஆவின் பாலகத்தில் உற்பத்தி செய்யப்படுகிற பிஸ்கட்டுகள் காலாவதி தேதி முடிந்த பிறகும் ஆவின் பாலகத்திற்கு முறைகேடாக பில் போடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், மாவட்ட ஆட்சியருக்கு இமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் காலாவதியான பிஸ்கட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் காலாவதியான பிஸ்கட்டுகள் சித்தோடு ஆவின் பாலக தலைமை அலுவலகத்தில் வைத்திருப்பதாகவும், அவை பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்ததாகவும், தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோபி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி குழந்தைவேலுவை தொடர்பு கொண்டு கேட்ட போது, நாளை ஆவின் பாலகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இது சம்பந்தமாக முழு அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்ட்ரெச்சர் இன்றி மூதாட்டியை தூக்கிச் சென்ற மகள்.. ஈரோடு அரசு மருத்துவமனை இணை இயக்குநரின் விளக்கம் என்ன? - Daughter Carrying Old Lady

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.