ETV Bharat / state

காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் வாதம் என்ன? - டாஸ்மாக்

Tasmac empty bottle: டாஸ்மாக் மதுபானக் கடைகளில், காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் மாநிலம் முழுவதும் 2024 செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 10:30 PM IST

சென்னை: மது அருந்துபவர்கள் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் இதை தடுக்கும் விதமாக காலி மது பாட்டில்களை மதுக்கடையில் திரும்பப் பெறும் திட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த திட்டம் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் தற்போது செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருவாரூர், நாகை, தேனி, தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் N. சதீஷ்குமார் மற்றும் D. பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஜனவரி மாதம் முதல், திருவாரூர், தருமபுரி, கன்னியகுமாரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மே மாதம் முதல், கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, திட்டம் செயல்படுத்தப்படுவது தொடர்பாக அடுத்தக்கட்ட அறிக்கையை தாக்கல் செய்வதற்காக, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: திமுக இருக்காது எனக் கூறிய பலர் காணாமல் போயுள்ளனர்.. பிரதமருக்கு கனிமொழி பதிலடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.