ETV Bharat / state

சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. யானை தந்தம் கடத்தல் கும்பலை பிடித்த வனத்துறையினர்! - Elephant tusk smuggling

Ivory: கோவை அருகே யானை தந்தத்தை கடத்த முயன்றவர்களை வனத்துறையினர் பிடித்து, சிறையில் அடைத்துள்ளனர்.

Gang
போலீஸ் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 7:36 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வழியாக கோவைக்கு யானை தந்தம் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில், மதுக்கரை வனச்சரகர் அருண்குமார், கோயமுத்தூர் வனச்சரகர் திருமுருகன் ஆகியோர் அடங்கிய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் யானை தந்தம் கடத்தி வரும் வாகனங்களை கண்காணித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், துடியலூர் பகுதியில் நின்றிருந்த குழுவினர், சந்தேகப்படும்படியாக வந்த பொலிரோ ஜீப்பை மடக்க முயன்றுள்ளனர். ஆனால், வனத்துறையினர் வந்த காரை இடித்து விட்டு பன்னிமடை வழியாக தப்பிச் செல்ல அவர்கள் முயன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மற்ற குழுக்களில் இருந்தவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, பொலிரோ வாகனத்தை வனத்துறையினர் சேசிங் செய்துள்ளனர். பின்னர், அந்த வாகனம் தடாகம் வீரபாண்டி அருகே வரும்போது வனத்துறையினரால் மடக்கி நிறுத்தப்பட்டுள்ளது.

பின்னர், அந்த வாகனத்தில் வந்த ஒரு பெண் உட்பட ஆறு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், நீலகிரி மாவட்டத்தில் இருந்து யானை தந்தம் கடத்தி வந்ததாகவும், அதனை கோவையில் உள்ள ஒருவருக்கு விற்க முடிவு செய்திருந்த நிலையில் வனத்துறையினர் தங்களை அடையாளம் கண்டு கொண்டதால், அவர்களிடம் இருந்து தப்பிச் செல்லும்போது சாலை ஓரத்தில் யானை தந்தத்தை வீசிச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் கூறிய இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், அங்கு யானை தந்தம் ஏதும் இல்லாததால் அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது, நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த பிதர்காடு பழங்குடியினர் சங்கத்தின் செயலாளராக உள்ள சங்கீதா தலைமையில், நீலகிரியில் இருந்து யானை தந்தத்தை கடத்தி வந்ததும், இதனை கோவையில் உள்ள ஒருவருக்கு விற்க முடிவு செய்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும், போலீசார் மற்றும் வனத்துறை சோதனை செய்தால் தப்பிக்க யானை தந்தத்தை பொலிரோ ஜீப் என்ஜின் பகுதியில் மறைத்து எடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, யானை தந்தம் கடத்தி வந்த கோவை கீரணத்தம் பகுதியைச் சார்ந்த சர்வேஷ், கூடலூர் பிதர்காட்டைச் சார்ந்த சங்கீதா, இடையர்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ், வெள்ளலூரைச் சார்ந்த லோகநாதன், நாகமாநாயக்கன்பாளையத்தைச் சார்ந்த அருள் ஆரோக்கியம் மற்றும் பாலமுருகன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து, அவர்களை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, யானை தந்தம் எங்கு உள்ளது, அதை யாருக்கு விற்க முடிவு செய்தனர், அவர்களின் பின்னணி என்பது குறித்து அறிய ஆறு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: சிகிச்சையில் பெண் யானை.. பாசப் போராட்டத்தில் குட்டி யானை.. மனதை உருக வைக்கும் காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.