ETV Bharat / state

ரூ.4 கோடி விவகாரம்.. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்! - Nainar Nagendran money seized case - NAINAR NAGENDRAN MONEY SEIZED CASE

Satyabrata Sahoo on Nainar Nagendran money seized case: பாஜகவின் நயினார் நாகேந்திரன் சம்பந்தப்பட்ட பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சத்யபிரதா சாகு, நயினார் நாகேந்திரன் புகைப்படம்
சத்யபிரதா சாகு, நயினார் நாகேந்திரன் புகைப்படம் (credits to Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 4:21 PM IST

திருவள்ளூர்: தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே நயினார் நாகேந்திரன் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (மே 7) நேரில் ஆய்வு செய்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வில், திருவள்ளூர் ஆட்சியர் பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், ஆவடி காவல் ஆணையர் சங்கர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஆகியோருடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில், சிசிடிவி கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சத்யபிரதா சாகு, “திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் ஒவ்வொன்றும் ஆய்வு செய்யப்படுகிறது. ஆய்வில் எந்தவித பாதுகாப்பு குறைபாடும் கண்டறியப்படவில்லை, அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது” எனக் கூறினார்.

தொடர்ந்து நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் கண்காணிப்பு கேமரா வேலை செய்யாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஓவர் லோடு காரணமாகவே கண்காணிப்பு கேமராவில் சற்று நேரம் பழுது ஏற்பட்டது. பின்னர் அது சரி செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில், அதுபோன்ற ஓவர் லோடு ஆகாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்தினால் உடல் சோர்வு ஏற்படாமல் இருப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன் சம்பந்தப்பட்ட ரூ.4 கோடி பணம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எது மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து முடிவு எடுக்கும். தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே நயினார் நாகேந்திரன் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் தொல்லியல் துறையினர் ஆய்வு! - Sathya Gnana Sabai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.