சென்னை: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக செம்பியம் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்தனர். மேலும், 3 பேரிடமும் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த படுகொலைக்கு அரசியல் கட்சியினர் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இந்த வழக்கில் அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்த 11 பேரையும் ஜூலை 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கொலைக்கான காரணங்கள், திட்டம் தீட்டியது மற்றும் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரிக்க ஏதுவாக காவல்துறை சார்பில் 15 நாட்கள் காவல்துறை விசாரணைக்கு அனுமதி வழங்கும்படி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், ஜூலை 17 வரை 5 நாட்கள் மட்டும் காவல்துறை விசாரணைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ரவுடிகளின் பட்டியலை கேட்ட சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ்.. அலறப் போகும் ரவுடிகள்!