ETV Bharat / state

சென்னையில் புகாரி ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை! - ed raid at Buhari hotel owner house

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 3:47 PM IST

ED raid at Buhari Hotel owner house: சென்னையில் உள்ள புகாரி உணவகத்தின் உரிமையாளர் சி.எம்.புகாரி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஏப்.9) காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.

ED Raid At Buhari Hotel Owner House
ED Raid At Buhari Hotel Owner House

சென்னை: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வசித்து வரும் புகாரி உணவகத்தின் உரிமையாளர் சி.எம்.புகாரி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சி.எம்.புகாரி மகன் இர்பான் புகாரி ஜாபர் சாதிக் தொடங்கிய சோயா டெலிவரிஸ் என்ற நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர்களது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும், ஜாபர் சாதிக் மற்றும் இர்பான் புகாரி இடையே தொழில் ரீதியான பணப் பரிவர்த்தனைகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே, புகாரி குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் பாசித் புகாரி என்பவருக்கு மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், அது தொடர்பாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் ஜாபர் சாதிக் 5க்கும் மேற்பட்ட புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்த நிறுவனங்களில் யார் யாரெல்லாம் பங்குதாரர்களாக இருக்கிறார்கள், யார் யாரெல்லாம் முதலீடு செய்துள்ளார்கள், யாருக்கெல்லாம் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களாக சேகரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சுமார் 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கும்பகோணம் ராமசாமி கோயிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது! - Kumbakonam Ramasamy Temple

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.