ETV Bharat / state

அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; ரூ.1.19 லட்சம் பறிமுதல்! - Arakkonam sub registrar office - ARAKKONAM SUB REGISTRAR OFFICE

Arakkonam sub registrar office: அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த ஐந்து மணிநேர சோதனையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத 1,19,830 ரூபாயை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.

Arakkonam sub registrar office image
அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 3:26 PM IST

ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக வின்சென்ட் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இங்கு நாள்தோறும் நிலம் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பத்திரப்பதிவு செய்வதற்கு ஒரு சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான ஆய்வாளர் விஜயலட்சுமி உட்பட 7 பேர் கொண்ட குழுவினர், நேற்று (ஜூன் 10) மாலை அதிரடியாக சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நுழைவு வாயில், வெளிப்புறக்கதவு மற்றும் அலுவலக கதவுகளை மூடி பூட்டியுள்ளனர். இதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள், பத்திரப்பதிவு முகவர்கள் மற்றும் பத்திரப்பதிவு செய்ய வந்த நபர்கள் உட்பட பலர் வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டனர்.

தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் அலுவலகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் கணக்கில் வராத 1 லட்சத்து 19 ஆயிரத்து 830 ரூபாய் பணத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பத்திரப்பதிவு அதிகாரிகள் மற்றும் உள்ளிருந்த நபர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர்.

மேலும், 5 மணி நேரத்துக்கு மேலாக பொதுமக்களை வெளியே அனுப்பாததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பிறகு அனைவரும் வெளியில் அனுப்பப்பட்டனர். இச்சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: '1000 ரூபாய்க்கு 1 கிராம் தங்கமாம்'.. சதுரங்க வேட்டையில் சிக்கிய பொதுமக்கள்.. கோடிகளை சுருட்டிய மோசடி பெண் கைது! - fake gold investment

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.