ETV Bharat / state

"தமிழகத்தை மாற்றாந்தாய் மனநிலையோடு தான் அணுகுகிறது" - மத்திய அரசு மீது எம்.பி. துரை வைகோ குற்றச்சாட்டு! - Durai vaiko on central fund

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

Updated : 2 hours ago

தமிழக இளைஞர்கள் உலகம் முழுவதும் வலம் வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் தமிழகத்தில் இருமொழி கொள்கை பின்பற்றுவதால்தான் என மதிமுக எம்.பி. துரை வைகோ கூறியுள்ளார்.

எம்.பி.துரை வைகோ
எம்.பி.துரை வைகோ (Credits- ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ திருநெல்வேலி சந்திப்பில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “இலங்கையில் புதிய அதிபராக அனுராகுமார திசநாயகே பதவியேற்றுள்ளார். இவர் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டவர்.

ஆனால் அவர் பதவியேற்ற பிறகு இன, மதங்களுக்கு அப்பாற்பட்டு தனது ஆட்சி இருக்கும் என ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளார். அவருக்கு எங்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஈழ தமிழர்களுக்கான அடிப்படை உரிமையை பெற்று தரவேண்டும். மேலும் இலங்கையில் புதிய அதிபர் பழம்பெரும் கட்சிகள் மத்தியில் வெற்றி பெற்றுள்ளார். எனவே இவரின் ஆட்சி அனைத்து தரப்பு மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு சமக்கரா சிக்‌ஷான் அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.249 கோடி நிதி இன்னும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. மேலும் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ரூ.500 கோடி நிதி வரவேண்டும். அதுவும் மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் பள்ளி கல்விதுறையில் முதலிடத்தில் உள்ளது.

எம்.பி.துரை வைகோ பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: தமிழக முதல்வர் டெல்லி பயணம்.. மெட்ரோ திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்குமா?

தமிழக இளைஞர்கள் உலகம் முழுவதும் வலம் வருகிறார்கள் என்றால் அது தமிழகத்தின் இரு மொழி கொள்கையினால் தான். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தரப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் கூறுகிறார். மும்மொழிக்கொள்கை மூலம் அவர்கள் ஹிந்தியை வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சிக்கின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

சென்னை மெட்ரோ திட்டத்தில் முதல் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி அளித்தது. ஆனால் மெட்ரோ 2ஆம் திட்டத்திற்கு 63 ஆயிரம் கோடி நிதி வரவேண்டும். அந்த நிதி மத்திய அரசிடம் இருந்து இன்னும் வரவில்லை. நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முதல் கட்டத்திற்குதான் நிதி வழங்கப்படும் 2-கட்டத்திற்கு நிதி எந்த மாநிலத்திற்கும் வழங்கவில்லை என்கிறார்.

ஆனால் தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியிலும் மெட்ரோ திட்டம் 2க்கு 22 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது. ஆனால் மத்திய அரசின் நிதி சீரோவில் உள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதை காட்டுகிறது” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.