ETV Bharat / state

மாதவிடாய் சமயத்தில் பெண்கள் செய்ய வேண்டியது என்ன? - மகப்பேறு மருத்துவர் திவ்யா ஷரோனா கூறும் அறிவுரை! - World Menstrual Hygiene Day 2024 - WORLD MENSTRUAL HYGIENE DAY 2024

Menstrual Hygiene Day: உலக மாதவிடாய் சுகாதார தினத்தில், மாதவிடாய் காலத்தில் நாப்கின்களைப் எப்படி முறையாகப் பயன்படுத்துவது, அப்புறப்படுத்துவது மற்றும் நிலையான மாதவிடாய் குறித்து சென்னை ரேலா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் திவ்யா ஷரோனா கூறுவது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.

உலக மாதவிடாய் சுகாதார தின கோப்புப்படம், மருத்துவர் திவ்யா ஷரோனா
உலக மாதவிடாய் சுகாதார தின கோப்புப்படம், மருத்துவர் திவ்யா ஷரோனா (Credits - ETV Bharat Tamil nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 12:28 PM IST

சென்னை: உலக மாதவிடாய் சுகாதார தினம் ஆண்டுதோறும் மே 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஜெர்மனியில் உள்ள வாஷ் யுனைடெட் (WASH United) தொண்டு நிறுவனத்தால் 2013ஆம் ஆண்டு மாதவிடாய் தினம் தொடங்கப்பட்டு, 2014ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் மாதவிடாய் சுகாதார தினத்தின் கருப்பொருள் 'மாதவிடாய்க்கு இணக்கமான உலகம்' என்பதாகும்.

மாதவிடாய் சுகாதார தினம் குறித்து சென்னை ரெலா மருத்துவமனையின் (Rela hospital), மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ துறையின்(Obstetrics and gynaecology department) இணை ஆலோசகர்(associate consultant) மருத்துவர் திவ்யா ஷரோனா கூறியதாவது, "பெண்களுக்கு மாதவிடாய் , ஒவ்வொரு மாதமும் அதாவது 28 நாட்களுக்குள் சுழற்சி முறையில் ஐந்து நாட்கள் இருக்கும். இது குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மகப்பேறு மருத்துவர் திவ்யா ஷரோனா (Credits - ETV Bharat Tamil nadu)

விழிப்புணர்வு: மாதவிடாய் சுகாதாரம், மாதவிடாய் பொருட்கள்(Menstrual products) கிடைப்பதன் முக்கியத்துவம், அவற்றை உபயோகிக்கும் முறை மற்றும் சுகாதார மற்றும் பாதுக்காப்பான முறையில் அப்புறப்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

சிடிசி வழிகாட்டுதல்கள்: சிடிசி வழிகாட்டுதலின் படி, (CDC - Centers for Disease Control and Prevention) சானிட்டரி பேட் (sanitary pads) ,டேம்பான்ஸ் (Tampons), மாதவிடாய் கப் (Menstrual cups), மாதவிடாய் டிஸ்க்குகள் (menstrual discs), Period panties, துணி நாப்கின்கள் (cloth napkins) ஆகிய மாதவிடாய் பொருள்கள் உள்ளன.

உபயோகிக்கும் முறை (Method of use) : மாதவிடாய் பொருள்களை உபயோகிக்கும் ஒவ்வொரு முறையின் முன்பாகவும், பின்னரும் முறையாக கையை கழுவுதல் வேண்டும். ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் சானிட்டரி நாப்கின்களை மாற்ற வேண்டும். அதிக ரத்த போக்கு உள்ளவர்கள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கின்களை மாற்ற வேண்டும். மாதவிடாய் கப் (Menstrual cups) பயன்படுத்துபவர் ரத்த போக்கின் அளவை பொறுத்து 6-8 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றிக்கொள்ளலாம். இவற்றை உபயோகிப்பவர்கள் வெந்நீரில் ஸ்டெரிலைஸ் செய்து பயன்படுத்த வேண்டும்.

மேலும், மாதவிடாய் காலங்களில் காட்டன் பேண்டீஸ் பயன்படுத்த வேண்டும். தற்போது உள்ள பாலிஸ்டின் பேண்டீஸ் பயன்படுத்தினால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வருவதற்கு வழிவகுக்கும். மேலும், ரீயூசபிள் பேட் பயன்படுத்தும் பொழுது அவற்றை வெந்நீரில் சுத்தம் செய்து, சூரிய வெளிச்சத்தில் உளற வைக்க வேண்டும். இவ்வாறு நாம் பயன்படுத்தினால், தேவையற்ற தொற்றுநோய்களை தடுக்கலாம் என்றார்.

அப்புறப்படுத்தும் முறை (Dispose): சானிட்டரி நாப்கின்களை ஃப்ளஷிங் செய்தல் கூடாது. இதில் உள்ள டை ஆக்சின் போன்ற ரசாயனப் பொருள்களால் கல்லீரல் கோளாறு போன்றவை ஏற்படும். எனவே, முறையாக அப்புறப்படுத்துதல் மிகவும் அவசியம். பயன்படுத்தப்பட்ட சானிட்டரி பேடுகளை காகிதத்தில் மடித்து குப்பைத் தொட்டியில் போடுதல் வேண்டும். அவற்றை அப்புறப்படுத்த கைகளை பயன்படுத்துவதால் அவர்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில் காகிதத்தில் மடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

நிலையான மாதவிடாய் (sustainable menstruation): நிலையான மாதவிடாய் என்பது உடல் மற்றும் சுற்றுச்சூழல் நன்மைக்கான பொருள்கள். சானிட்டரி பேடுகளில் உள்ள ரசாயணம் மற்றும் பிலாஸ்டிக் கவர்கள் மக்குவதற்கு 100 வருடங்களுக்கு மேலாகிறது. சராசரியாக 40 ஆண்டுகளுக்கு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுகிறது. இதனால், ஒருவருக்கே 100 கிலோவிற்கு மேலாக மாதவிடாய் கழிவுகள் உருவாகிறது. இவைகள் மக்குவதற்கு பல்வேறு வருடங்கள் ஆகும் என்பதால் இவை வருங்கால சந்ததியினரை பாதிக்கும்.

எனவே, மாதவிடாய் கப், மட்கும் பேடுகள் (biodegradable pads) பயன்படுத்தலாம். இதனால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். பொருளாதார ரீதியாக மாதவிடாய் கப் பயன்படுத்துவது சிறந்தது. ரூ.400க்கு வாங்கப்படும் இவற்றை, நாம் 5 வருடங்கள் வரை பயன்படுத்தலாம். மேலும், மாதவிடாய் காலங்களில் வலி மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பின் மகப்பேறு மருத்துவரை அணுகுதல் வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிகரெட்டை விட இது மோசம்! பெண்களை அச்சுறுத்தும் கேன்சர்! தீர்வு என்ன? - Causes Of Cancer

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.