ETV Bharat / state

'மருத்துவப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யமாட்டோம்'? தமிழக அரசு மீது சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வருத்தம்!

மருத்துவப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய மாட்டோம் என திமுக அரசு எழுத்துப்பூர்வமாக கூறியுள்ளது என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

Updated : 1 hours ago

டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் மற்றும் ஏ.ஆர். சாந்தி
டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் மற்றும் ஏ.ஆர். சாந்தி (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் மற்றும் ஆர்.சி.எச் தூய்மைப் பணியாளர்கள் நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.ஆர்.சாந்தி ஆகியோர் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ''தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2005ஆம் ஆண்டு முதல் ஆர்.சி.எச் திட்டத்தின் கீழ், தற்காலிக அடிப்படையில் 3,140க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.

வார விடுமுறை, தேசிய விடுமுறை, மருத்துவ விடுப்பு என்று எந்த விடுமுறையும் இல்லாமல் தொடர்ந்து தினமும் 12 மணி நேரம் பணி என கடுமையான வேலையைச் செய்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வெறும் ரூபாய் 1,500 மட்டுமே மாத தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஊதிய உயர்வு: அவர்களுக்கு ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் வழங்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். இவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்குவதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அது நடைமுறை படுத்தப்படவில்லை. பின்னர் 2017 ஏப்ரல் 5ந் தேதியிட்ட அரசாணையின்படி, மாவட்ட ஆட்சியர் மூலம், குறைந்த பட்ச ஊதியம் சட்டத்திருத்தப்படி, தினக்கூலி அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆணையும் நிறைவேற்றப்படவில்லை.

ஆர்சிஎச் பணியாளர்களுக்கு 941 பணி இடங்கள் அனுமதிக்கப்பட்டு (Sanctioned) உள்ளது. ஆனால், அதில் 841 பணியாளர்கள் பெயர்கள் மட்டுமே பட்டியலாக வெளியிடப்பட்டது. அந்த 841 இடங்களிலும் 7க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்னும் பணி ஆணை வழங்கப்படவில்லை. காத்திருப்பு பட்டியலில் உள்ள 547 நபர்களின் பெயர் விவரங்களை வெளியிட வேண்டும். அவர்களுக்கும் விரைவாக பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக, பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்.

2,000க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களில் வெறும் 1,345 தூய்மை பணியாளர்கள் மட்டுமே பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக தகுதி உள்ளவர்களாக அரசு அறிவித்துள்ளது. அரசாணை அடிப்படையில், தேர்வு பெறாமல் ஏறத்தாழ 946 பேர் உள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வு பெற்றவர்கள் மற்றும் தேர்வு பெறாதவர்கள் அவர்களின் பெயர், தேர்வு பெறாதவர்களுக்கு அதற்கான காரணம் உள்ளிட்ட விவரங்களையும் உடனடியாக வெளியிடவேண்டும்.

ஆர்.சி.எச் தூய்மைப் பணியாளர்களில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளராக தேர்வான 1,345 பேர் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத 946 நபர்களில் 60 வயது நிரம்பிய 210 போக 736 ஆர்.சி.எச் தூய்மை பணியாளர்களையும், முடிந்த வரையில் அவர்களது நீண்ட கால பணியை கருத்தில் கொண்டு, பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக பணி நியமனம் செய்திட வேண்டும்.

தினக்கூலியாக 350 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஊதியச் சட்டப்படி குறைந்த பட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.

MPHW வேலை: எழுதப் படிக்கத் தெரிந்து பள்ளிச் சான்றிதழை பெற இயலாத ஆர்.சி.எச் தூய்மைப் பணியாளர்களுக்கு MPHW வேலை வழங்க வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு என்ற விதிக்கப்பட்ட பணிகள் தவிர, ஊசி போடுவது, கட்டு கட்டுவது போன்ற அவர்களுக்குத் தொடர்பு இல்லாத பணிகளை செய்யச் சொல்லக்கூடாது. தாமதம் இன்றி, உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பேறுகாலத் தாய்மார்கள் இறப்பிற்கு, பிரசவத்திற்கு பிந்தைய அதீதமான உதிரப்போக்கும், பிரசவத்தின் பொழுது ஏற்படும் திடீர் சிக்கல்களும், அவற்றை எதிர்கொண்டு தாய்மார்களை காப்பாற்றும் அடிப்படை வசதிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லாத நிலையும் மிக முக்கியக் காரணங்களாக அமைகின்றன.

எனவே, மகப்பேறு மருத்துவர், குழந்தைகள் மருத்துவர், மயக்க மருத்துவர், போதிய செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ள அறுவை அரங்கம், ரத்த வங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே பிரசவம் பார்க்கும் நிலையை உருவாக்கிட வேண்டும். மேற்கண்ட அடிப்படை வசதிகளற்ற ஆரம்ப சுகாதர நிலையங்களில் பிரசவம் பார்க்க கட்டாயப் படுத்திடக் கூடாது. தாய்மார்களின் நலன்களுக்கு எதிரான இத்தகையப் போக்கை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

மருத்துவத்துறையில் பணியாற்றி வரும் பணியாளர்கள் 10 வருடம் இருப்பவர்கள் பணி நிரந்தரம் கேட்கின்றனர். திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது சட்டப்பேரவையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அதிமுக அரசை பார்த்து திமுக எம்எல்ஏ கேட்டுள்ளனர். தற்பொழுது ஆட்சிக்கு வந்தப் பின்னர் மாற்றிப் பேசுவது யாருக்காக அவர்கள் பணிக் கேட்டார்களோ , அவர்களுக்கே பணி நிரந்தரம் வழங்க முடியாது என அதிகாரிகள் எழுத்து மூலமாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது. திமுக ஆட்சியில் பணி நிரந்தரம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பணி நிரந்தரம் வழங்கமுடியாது என கூறுவது அதிர்ச்சியாக உள்ளது. இது அவர்களின் உரிமையை பறிக்கும் செயலாகும்.

பணி நிரந்தர வாக்குறுதி: அதிமுக ஆட்சியில் இருந்த நேரத்தில், தற்பொழுது அமைச்சராக இருக்கும் எ. வ. வேலு, சட்டப்பேரவையில் பல்நோக்கு பணியாளர்களுக்கு எப்போது பணி நிரந்தரம் செய்யப்படும் என கேட்டார். அதற்கு பதிலளித்து அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் பணி நிரந்தரம் செய்யப்படும் என கூறினார். ஆனால், அதிமுக அரசு பணி நிரந்தரம் வழங்கவில்லை. திமுக அரசும் பணி நிரந்தரம் வழங்கவில்லை. அதற்கு நேர் எதிர்மாறாக நாங்கள் பணிநிரந்தரம் செய்யமாட்டோம் என எழுத்துப்பூர்வமாக கூறியுள்ளது வருத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

எனவே, அவர்களுக்கு அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 10, 15 ஆண்டாக பணியில் உள்ளவர்கள் பணி நிரந்தரம் கேட்டு வழக்கு தொடர்கின்றனர் .எனவே அவர்களை பணியில் வைத்துக் கொள்ள கூடாது என சில இடங்களில் கடிதம் அனுப்புகின்றனர். இது ஏற்புடையது அல்ல. திமுக தேர்தல் அறிக்கையில் ஒப்பந்தப் பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர்கள் என கூறினர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என கூறியுள்ளார். இந்த நிலையில் அதற்கு எதிர்மாறாக சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது'' என இவ்வாறு தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : 1 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.