ETV Bharat / state

முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சார்ந்த மருத்துவர் பிரசாந்த்! - upsc result tamilnadu

UPSC Result 2023: எம்பிபிஎஸ் படிப்பினை முடித்துவிட்டு 8 மாதத்தில் யுபிஎஸ்சி தேர்விற்கு படித்து முதல் முயற்சியிலேயே தமிழகத்தைச் சார்ந்த பிரசாந்த் இந்திய அளவில் 78வது இடத்தை பிடித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 9:03 PM IST

Updated : Apr 16, 2024, 10:56 PM IST

சென்னை
சென்னை
முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சார்ந்த மருத்துவர் பிரசாந்த்!

சென்னை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் எனப்படும் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 16) வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் மொத்தம் 1016 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய அளவில் தமிழகத்தைச் சேர்ந்த புவனேஷ் ராம் 41வது இடத்தை பெற்று தமிழக அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக பிரசாந்த் என்பவர் 78வது இடத்தை இந்திய அளவிலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2வது இடத்தையும் பிடித்துள்ளார். இவர் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு ஆபிஸர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றுள்ளார்.

இது குறித்து ஈடிவி பாரத்திற்கு பிரசாந்த் பிரத்தியேகமாகப் பேட்டி அளித்துள்ளார். அப்போது கூறியதாவது, "ஐஏஎஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது பெருமையாக உள்ளது. தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி. தான் படிக்கும் பொழுதே மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வளர்ந்தேன்.

எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு நிர்வாகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக ஐஏஎஸ் தேர்வு எழுதினேன். எட்டு மாதம் மட்டுமே படித்து முதல் முயற்சியிலேயே தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். நான் பள்ளியில் படிக்கும் போதே சமூகப் பணியையும் செய்துள்ளேன்.

ஐஏஎஸ் ஆவதற்கு அதிக நேரம் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. படிக்கும் பொழுது கவனமாகப் புரிந்து படித்தால் போதுமானது. நான் படிக்கும் பொழுது இரண்டு மூன்று மணி நேரம் படித்தாலும் பிற நேரங்களில் பொழுதுபோக்காகவும் இருந்தேன்.

பள்ளியில் படிக்கும் போதைப் பொருள்களை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு போன்றவற்றைச் செய்துள்ளேன். கல்வி மருத்துவம் ஆகிய இரண்டும் மக்களுக்கு முக்கியமாக உள்ளது. அதனை அளிப்பதற்குப் பாடுபடுவேன். எந்த ஒரு பழக்கத்தையும் ஒழிக்க வேண்டும் என்பது இல்லாமல் அதிலிருந்து அவர்களை மாற்றி வளர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்! - 2023 UPSC Civil Service Exam Result

Last Updated : Apr 16, 2024, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.