சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான, திமுக முதன்மை செயலாளர், கே.என்.நேரு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் என 5 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 20ஆம் தேதி வெளியிட்டார்.
இந்த குழு வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக திமுகவில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாறுதல்கள் அமைப்பு ரீதியான சீரமைப்புகளைத் தலைமைக்குப் பரிந்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, திமுக மகளிரணி - மகளிரணி பிரச்சாரக்குழு மற்றும் மகளிர் தொண்டரணி மாநில நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துக் கலந்துரையாடப்பட்டது.
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற, மாணவரணியினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் முன்னேற்றத்துக்காக, திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையும், மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கழகம் மேற்கொண்டு வரும் பணிகளையும் மாணவ சமுதாயத்தினர் மத்தியில் எடுத்துச் செல்கின்ற பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தின் நிறைவில் மாணவர்களின் ஆதரவையும் – நம்பிக்கையையும் பெற்றிடும் வகையில் களப்பணியாற்றிடும் என அனைத்து நிர்வாகிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 2026 தேர்தல்; அதிரடி ஆக்ஷனில் திமுக.. அதிகார மையமாகும் குறிஞ்சி இல்லம்.. உதயநிதியின் திட்டம் என்ன?