ETV Bharat / state

கோவையில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பையா கவுண்டர் தற்கொலை!

Dmk payya gounder suicide: கோவை மேற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பையா கவுண்டர் இன்று அதிகாலை அவரது வீட்டில் செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பையா கவுண்டர் தற்கொலை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 10:47 AM IST

கோயம்புத்தூர்: கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் (65). இவர் திமுகவில் கோவை மேற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர். காளப்பட்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவராக இருந்த இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார்.

இவரது கட்சிப் பதவி கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பறிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் களப்பட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணங்கள் குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தொப்பூரில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து...3 பேர் உயிரிழப்பு! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.