விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ந.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்தது. எனவே, இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா உள்ளிட்டோர் போட்டியிட்டனர். ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று (ஜூலை 13) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
திமுக வேட்பாளர் அமோக வெற்றி#DMKCandidate #DMK #VikravandiByElection #VikravandiByElection2024 #ByElection #Bypoll #AnniyurSiva #ElectionResult #VoteCounting #ETVBharatTamil@anniyur_siva pic.twitter.com/kbRaeErjM8
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) July 13, 2024
மொத்தம் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், அதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67 ஆயிரத்து 169 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56 ஆயிரத்து 296 வாக்குகள் பெற்றார்.
அவரைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட அபிநயா 10 ஆயிரத்து 602 வாக்குகள் பெற்றார். நோட்டாவுக்கு 859 வாக்குகள் பதிவாகின. இதன் மூலம் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்ததியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் விக்கிரவாண்டி தொகுதியை திமுக தக்கவைத்துக் கொண்டது.
டெபாசிட்டை இழந்த நா.த.க#NTKCandidate #NTK #VikravandiByElection #VikravandiByElection2024 #ByElection #Bypoll #Abinaya #ElectionResult #VoteCounting #Deposit #ETVBharatTamil pic.twitter.com/6kI7fHq7oZ
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) July 13, 2024
அன்னியூர் சிவா வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருப்பதை அறிந்து அறிவாலயத்திற்கு விரைந்த முதலமைச்சர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.
இதையும் படிங்க: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி!