ETV Bharat / state

குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டுத் தேர்தல் பிரச்சாரம்.. சரமாரியாகக் கேள்வி எழுப்பிய பெண்கள்! - DMK

Election Campaign: பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆளும் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்ட நபரிடம் மதுக்கடையை மூட வேண்டும், எனச் சொல்லி பெண்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 5:21 PM IST

தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நபரிடம் கேள்வி எழுப்பிய பெண்கள்

தருமபுரி: நாடாளுமன்றத் தேர்தல் கூடிய விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காகப் பல்வேறு கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, தொகுதிப் பங்கீடு, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாகத் தேர்தல் வருகின்றது என்றாலே, அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வர். அப்படி மேற்கொள்ளும்போது சிலர் உணவுகள் தயாரிப்பது, மேளதாளம் அடித்து ஓட்டுக் கேட்பது போன்ற வித்தியாசமான முறையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வர்.

அந்த வரிசையில், தற்போது ‘குடுகுடுப்பை’ அடித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் திமுகவைச் சார்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் என்பவர். இவர் தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் ஆளும் கட்சியான திமுகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் குடுகுடுப்பை வேடம் அணிந்து கொண்டு, பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார் கோவிந்தன். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஒருவர் ”டாஸ்மார்க் மதுபானத்தால் எத்தனை பேர் உயிரிழந்த இருக்கிறார்கள்.

எனது கணவன் மதுபானக் கடையில் மது வாங்கி குடித்து விட்டு எந்த வேலைக்கும் செல்வதில்லை. மதுபானக் கடையை எடுங்கள் நான் ஓட்டுப் போடுகிறேன் என்றார். மற்றொருவரே, இங்குள்ள அனைத்துப் பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு வேலையில்லை, படித்துவிட்டு 10 வரும் வீட்டில் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்றார். மேலும் கேஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, இப்படி இருந்தால் நாங்கள் எப்படிப் பிழைப்பது என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டனர். இதனால் பெண்களிடம் பதில் செல்ல முடியாமல் அங்கிருந்து கிளம்பினார். திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் கோவிந்தனிடம் பெண்கள், சரமாரியாகக் கேள்வி எழுப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க: வீட்டில் வைத்து பிரசவம்: பரிதாபமாக பறிபோன தாய்-சேய் உயிர்! கேரளாவில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.