ETV Bharat / state

பொத்தேரி கஞ்சா விவகாரம்; 11 மாணவர்கள் ஜாமீனில் விடுவிப்பு.. 3 பேருக்கு ஜெயில்! - Police Raid In Potheri - POLICE RAID IN POTHERI

Potheri Police Raid: பொத்தேரியில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டதில், 11 மாணவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும், வடமாநிலத்தைச் சேர்ந்த 3 நபர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ரவுடி செல்வமணி, போலீசார் சோதனை
கைது செய்யப்பட்ட ரவுடி செல்வமணி, போலீசார் சோதனை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2024, 10:17 AM IST

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் சிலர் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடிமையாகி வருவதாகவும், அவர்கள் தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி வருவதாகவும் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வரும் நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பெயரில் கூடுதல் ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில், தாம்பரம், பள்ளிக்கரணை துணை ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பொத்தேரி தனியார் பல்கலைக்கழகத்தை சுற்றி அமைந்துள்ள 500க்கும் மேற்பட்ட விடுதிகள், வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் 19 மாணவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து அரை கிலோ கஞ்சா, போதை சாக்லேட் 6, கஞ்சா எண்ணெய் 20 மி.லி, பாங்கு 5, புகை பிடிக்கும் பானை 1, குட்கா 7, குட்கா தூள் 6 ஆகியவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், மாணவர்களுக்கு தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை சப்ளை செய்து வந்தது ஏ ப்ளஸ் கேட்டகிரி ரவுடி என்பது தெரியவந்தது. இதையடுத்து கூடுவாஞ்சேரி பகுதியில் பதுங்கி இருந்த நந்திவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்வமணி(29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 2 1/2 கிலோ கஞ்சா, நான்கு பட்டா கத்திகளும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து செல்வமணி அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் 30க்கும் அதிகமான மாணவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கல்லூரி மாணவர்கள் உட்பட 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் ரவுடி செல்வமணிக்கு கஞ்சா சாக்லேட் சப்ளை செய்து வந்த உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த தாபா உரிமையாளர் ஒருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தயாரிக்கப்படும் கஞ்சா சாக்லேட்டை கடத்திக் கொண்டு தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடமிருந்து பட்டா கத்திகள், கஞ்சா சாக்லேட் ஆகியவையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த மூன்று வட மாநிலத்தவர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 11 மாணவர்கள் என மொத்தம் 14 பேரை போலீசார் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 11 கல்லூரி மாணவர்களையும் அவர்களின் சொந்த பிணையில் விடுவித்தார். மேலும், கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வட மாநிலத்தைச் சார்ந்த மகேஷ்குமார் (29), சுனில்குமார் (29), டப்லு (23) ஆகிய மூன்று பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : கஞ்சா ஆயில் முதல் போதை சாக்லேட் வரை.. ஒரு மாணவி உள்பட 40 பேரிடம் கிடுக்குப்பிடி விசாரணை! - Police Raid in Potheri

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.