ETV Bharat / state

திருகார்த்திகை தீபத்திருவிழா; கிரிவலப்பாதை பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மாவட்ட காவல் துறை! - DEEPAM FESTIVAL AT TIRUVANNAMALAI

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு, கிரிவலப்பாதை பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. தீபத்திருவிழாவையொட்டி,. மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை கோயில் மற்றும் மகா தீபம்
திருவண்ணாமலை கோயில் மற்றும் மகா தீபம் (Credits - district official site)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2024, 8:59 PM IST

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு டிச 12 - 15 வரை போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி பக்தர்கள் வந்து கிரிவலம் செல்ல ஏதுவாக 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 116 கார் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை மக்கள் அறிந்து, அவற்றை முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

"பக்தர்கள் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங் இடங்கள் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை WhatsApp உதவி எண் 9363622330 -ற்கு Message மூலம் தொடர்பு கொண்டு Google Map Linkஐ பெற்று Google Map உதவியுடன் அந்தந்த கார் பார்க்கிங் வசதிகளுக்கு செல்லலாம்"

  • பக்தர்களுக்கு நீர்மோர் வழங்குதல், திலகமிடுதல், ஆசிர்வதித்தல் என்ற போர்வையில் ஏமாற்றியும் மற்றும் மிரட்டியும் பக்தர்களிடமிருந்து பணம் வசூலிப்பது குற்றமாகும். அக்குற்றச் செயல்களை கண்காணிக்க கிரிவலப்பாதையில் பிரத்யேகமாக காவல் அதிவிரைவுப் படைகள் (QRT) ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அக்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்பட்டு கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என எச்சரிக்கப்படுகிறது.
  • பக்தர்கள் நான்கு கோபுரங்களுக்கு முன்போ, கிரிவலப்பாதையிலோ எங்கும் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.
  • கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக உலாவ விடக்கூடாது. பக்தர்களும் கால்நடைகளுக்கு அகத்திக்கீரை உள்ளிட்டவற்றை வழங்குவதை தவிர்க்கவும்.
  • உரிய அனுமதியின்றி அன்னதானம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்படுகிறது.
  • கிரிவலம் செல்லும் பக்தர்கள் தங்களது குழந்தைகளையும் வயதானவர்களையும், பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
  • பக்தர்கள் தங்களது செல்போன், ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும். யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். சந்தேகத்திற்கிடமான நபர்களையோ அல்லது பொருட்களையோ கண்டால் உடனடியாக அருகில் உள்ள காவல்துறை அலுவலரிடம் தெரிவிக்கவும்.
  • பக்தர்கள் உதவிக்கு அருகிலுள்ள May I Help You Booth / காவல் உதவி மையத்தை அணுகலாம். கீழ்காணும் அலைபேசி எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி எண்கள் டிச 12 (07:00 AM) முதல் டிச 15 (06:00PM) வரை 24 மணி நேரமும் செயல்படும்.
1

திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு

காவல் நிலையம்

04175-222303
2உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்9498100431
3அவசர உதவி எண்100
4மாவட்ட காவல் கட்டுப்பாட்டு எண் 9159616263
  • பக்தர்கள், கிரிவலப்பாதையை ஒட்டியுள்ள நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும்.
  • கிரிவலப்பாதையில் நிறுவப்பட்டுள்ள தற்காலிக கழிப்பிடங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
  • குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும்.
  • பக்தர்கள், தங்களது காலணிகளை 4 கோபுரங்களுக்கு முன்பும், மாடவீதிகளிலும் விடுவதை தவிர்க்கவும். கடைகள் அல்லது காலணி பாதுகாப்பகங்களில் விட அறிவுறுத்தப்படுகிறது.
  • கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக தற்காலிக கடைகள் அமைக்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறும் பட்சத்தில் சட்டபடி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
  • கிரிவலப்பாதை மற்றும் மாடவீதிகளில் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களான பீபீ உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் குற்றமாகும்.
  • பக்தர்களுக்கு இடையூறாக கிரிவலப்பாதை மற்றும் மாட வீதிகளில் உள்ள நிரந்தர கடைகளில் அதிக ஒலியுடன் கூடிய விளம்பர ஆடியோக்கள் ஒலிபரப்ப தடை செய்யப்பட்டுள்ளது.
  • கிரிவலப்பாதையில் தற்காலிகமாக கடைகள் அமைத்தோ, தங்கியோ கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமையல் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சமையல் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும்.
  • அனுமதியின்றி வனப்பகுதியில் பிரவேசிப்பதும் மலையின் மீது ஏற முயற்சிப்பதும் குற்றமாகும். அந்நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்படின் அருகில் உள்ள மருத்துவ முகாம்களின் மூலம் மருத்துவ உதவி பெறலாம். உதவிக்கு அருகில் உள்ள காவல் உதவி மையத்தையும் (May I Help You Booth) அணுகலாம்.

மதுக்கடைகளை மூட அறிவுறுத்தல் : "திருவண்ணாமலை வட்டம் மற்றும் நகரம், அருணாசவேஸ்வரர் திருக்கோயில் 2024ம் ஆண்டு திருகார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரப் பகுதிக்கு அருகாமையில் இயங்கி வரும் மணலூர்பேட்டை சாலையில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடை எண் : 9261, காமராஜர் சிலை அருகில், திருமஞ்சன கோபுர வீதியில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடை எண்: 9481, வசந்தம் நகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் இயங்கி வரும் கடை எண்: 9490 ஆகிய 3 அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளும், டிச 12 அன்று காலை 12.00 மணி முதல் டிச 14 அன்று இரவு 10.00 வரை 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், திருவண்ணாமலை நகரத்தின் உள்பகுதியில் இயங்கிவரும் மதுபானக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் (எப்எல்3), தி/ள்.ஹோட்டல் நளா, தி/ள்.ஹோட்டல் அஷ்ரேய்யா, தி/ள்.ஹோட்டல் அம்மாயி மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கான அங்காடி, வேங்கிக்கால் (எப்எல் 4A) ஆகிய உரிமம் பெற்ற மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு டிச 12 அன்று காலை 10.00 மணி முதல் டிச 14 அன்று இரவு 10.00 வரை 3 நாட்களுக்கும் மது விற்பனை நடைபெறாமல் மூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : திருவண்ணாமலையில் மண்சரிவr, எப்போ? 'ஓ மை காட்' நடிகர் ரஜினிகாந்த் ரியாக்ஷன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.