ETV Bharat / state

சென்னை மேயர் தலைமையில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதக் கூட்டம்.. 81 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Mayor Priya: பெருநகர சென்னை மாநகராட்சியின் 2024 - 25ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று (பிப்.22) மேயர் ஆர். பிரியா தலைமையில் நடைபெற்ற நிலையில், 81 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை
சென்னை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 10:26 PM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் 2024 - 25ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று (பிப்.22) மேயர் ஆர். பிரியா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர், கூடுதல் தலைமைச் செயலாளர், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், 81 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி 69வது வட்டம் சோமையா தெரு உயர்நிலைப் பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்ட 2.75 கோடி ரூபாய், ரங்கசாயி தெரு நடுநிலைப் பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்ட 3 கோடி ரூபாய், 70வது வட்டம் கபிலன் தெரு நடுநிலைப் பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்ட 4.63 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது‌.

அதேபோல் விருகம்பாக்கம் கால்வாய் குறுக்கே சூளைமேடு ரயில்வே காலனி 3வது தெருவையும் மாதா கோவில் தெருவையும் இணைக்கும் நடைப்பாலத்தை அகற்றிவிட்டு 1.60 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கவும், 97வது வட்டம் வீராசாமி தெரு, சோலை 3வது தெருவில் உள்ள தனியார்ப் பள்ளி வளாகங்களை இணைத்து மேம்பாலம் அமைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், 110வது வட்டம் புஷ்பா நகர் பிரதான சாலையில் உள்ள ஆரம்பச் சுகாதார மையத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட 3.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. லயோலா கல்லூரி தேவாலய உறுப்பினர்களை அடக்கம் செய்ய, கல்லூரி வளாகத்தில் ஒதுக்கப்பட்ட இடம் முழுமை பெற்றுவிட்டதால், கூடுதலாக 2,760 சதுர அடிப் பரப்பை மயானப் பூமியாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட 81 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி 50 லட்சமாக உயர்வு - மேயர் பிரியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.