ETV Bharat / state

வடிவேலு உடன் படம் நடிக்கிறேனா?.. இயக்குநர் பார்த்திபன் சொன்ன பளிச் பதில்! - டீன்ஸ் லுக்

Director Parthiban's TEENZ: நான்கு வெற்றிப் படங்கள் கொடுத்தால் நடிகர்கள் நம்மைத் தேடி வருவார்கள். லோகேஷ் கனகராஜ் வெற்றிப் படங்களைக் கொடுத்ததால் தான் ரஜினிகாந்த், விஜய் எல்லாம் லோகேஷை தேடிச் செல்கின்றனர் என இமான் பிறந்தநாள் நிகழ்ச்சியில் இயக்குநர் பார்த்திபன் ஈடிவி பாரத்-திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பார்த்திபன் பேட்டி
இயக்குனர் பார்த்திபன் பேட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 5:15 PM IST

இயக்குனர் பார்த்திபன் பேட்டி

சென்னை: இயக்குநர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி தனி இடத்தை பிடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றவர். இவரது முந்தைய படமான இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான் லீனியர் படம் என்ற கின்னஸ் சாதனை படைத்தது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.

மேலும், இப்படத்தில் இடம்பெற்ற மாயவா தூயவா பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்த நிலையில் தற்போது குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச த்ரில்லர் படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இமான் இசை அமைத்துள்ள நிலையில் காவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார். டீன்ஸ் எனப் படத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் முதல் பார்வை முதல்முறையாக சென்சார் சான்றிதழுடன் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இசை அமைப்பாளர் இமானின் பிறந்தநாள் மற்றும் (TEENZ) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கின்னஸ் சாதனை அங்கீகரித்துள்ளதைக் கொண்டாடும் வகையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் அரங்கில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பார்த்திபன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், “இதுபோன்ற 80, 90 கதைகளை நான் சேமித்து வைத்துள்ளேன். ஒவ்வொன்றாகத்தான் பண்ண முடியும். இரவின் நிழல் படத்தின் போது ஏகப்பட்ட எதிர்மறையான விஷயங்கள் உருவாகி விட்டது. நான் சொல்ல வந்த கதை வேறு. தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதைக் கவர்ச்சியாக யாரும் பார்த்ததில்லை.

ஆனால், அதையும் கவர்ச்சியாகப் பார்த்துவிட்டனர். இதுபோன்ற நெருடல்கள் இரவின் நிழல் படத்திற்கு வந்ததால் இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக இயக்கியுள்ளேன். குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும் அதையும் த்ரில்லர் கலந்து கமர்ஷியலாக இயக்கியுள்ளேன்.

இரவின்‌ நிழல் படத்தின் தயாரிப்பு செலவு அதிகரித்து விட்டது அதனால் அப்படம் தயாரிப்பாளருக்கு லாபம் தரவில்லை. ஆனாலும், இந்த படத்தை அவர்கள் தயாரித்து உள்ளனர். எனது படங்களுக்கு மக்களிடம் அங்கீகாரம் கிடைக்காத போது இரவுகளில் அழுவேன் விடிந்ததும் கண்களைத் துடைத்துக் கொண்டு அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவேன்” என்றார்.

மேலும், பெரிய நடிகர்களை வைத்து ஏன் படம் இயக்கவில்லை என்ற கேள்விக்கு, “நாம் நான்கு வெற்றிப் படங்கள் கொடுத்தால் அவர்கள் நம்மைத் தேடி வருவார்கள். லோகேஷ் கனகராஜ் வெற்றிப் படங்களைக் கொடுத்ததால் தான் அவரை ரஜினிகாந்த், விஜய் எல்லாம் தேடிச் செல்கின்றனர். நாமும் நான்கு வெற்றிப் படங்கள் கொடுத்தால் அவர்கள் நம்மிடம் வருவார்கள் நாமே சென்று கேட்டால் பிரயோஜனம் இல்லை.

அடுத்து காமெடி படம் மற்றும் கமர்ஷியல் படம் பண்ணுகிறேன்.‌ வடிவேலு உடன் படம் நடிக்கக் கூடாது என்று இல்லை அது அமைய வேண்டும். அமைந்தால் நிச்சயம் இணைந்து நடிப்போம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Oscars 2024: 13 பிரிவுகளில் பரிந்துரை! எலைட்டை கோட்டைவிட்ட ஓபன்ஹெய்மர்! அது என்ன எலைட் பிரிவு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.