ETV Bharat / state

தேனி கல்லூரி மாணவி பாலியல் தொல்லை புகாருக்கு காவல்துறை மறுப்பு.. என்ன நடந்தது? - Dindigul SP

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு திண்டுக்கல்லில் இறக்கிவிடப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2024, 8:21 AM IST

திண்டுக்கல்: இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் பிரதீப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி, நேற்று தனது வீட்டிலிருந்து கல்லூரி செல்வதற்காக பேருந்து மூலம் தேனி பழைய பேருந்து நிலையம் வந்து இறங்கி, அருகிலிருந்த கழிவறைக்ச்கு சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை இன்னோவா காரில் கடத்தி, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பின்னர் தன்னை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டதாகவும், தான் ஒரு ஆட்டோ மூலம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையம் வந்து புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரினை பெற்று விசாரணை செய்து, இது தொடர்பாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்.16/24 u/s 87, 70(1) BNS வழக்குப்பதிவு செய்து அம்மாணவியை மருத்துவப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தேனி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்; இருமாவட்ட போலீசார் தீவிர விசாரணை!

அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்ததில், அம்மாணவி கூறியது போல் எந்தவொரு கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் நடைபெறவில்லை என்பதும், அம்மாணவி மனஅழுத்தம் காரணமாக தவறான புகார் அளித்துள்ளார் என்பதும் தெரியவருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.