தருமபுரி: தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆ.மணி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணியை விட 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள விபரம்...
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1 | ஆ.மணி | திமுக | 4,32,667 |
2 | செளமியா அன்புமணி | பாமக | 4,11,367 |
3 | அசோகன் | அதிமுக | 2,93,629 |
4 | அபிநயா | நாதக | 65,381 |
தருமபுரி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்:
- தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை பின்னுக்கு தள்ளி திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி பெற்றார்.
- தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை 3 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி திமுக வேட்பாளர் ஆ.மணி முன்னிலை வகித்துள்ளார்.
- 16 வது சுற்று முடிவில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி திடீர் பின்னடைவை சந்தித்தார். அதனை அடுத்த சுற்றில் 3291 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் முன்னிலை வகிக்கிறார்.
- தருமபுரி தொகுதியில் மதியம் 12 மணிநேர நிலவரப்படி, பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 19,568 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இவருக்கு அடுத்ததாக, திமுக வேட்பாளர் 1,06,457 வாக்குகளை பெற்றுள்ளார்.
- தருமபுரி மக்களவைத் தொகுதியில் காலை 10 மணி நிலவரப்படி, பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார். பாமக -25,428, திமுக -15247, அதிமுக: 13066, நாதக: 2453 வாக்குகளை பெற்றுள்ளன. இதன்படி திமுக வேட்பாளரை விட 13364 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிவை வகிக்கிறார்.
2019 தேர்தலில் பதிவான வாக்குகள்: கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 14,84,027 வாக்காளர்கள் உள்ள நிலையில், ஆண்கள் 7,55,323 வாக்காளர்களும், பெண்கள் 7,28,574 வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 130 வாக்காளர்களும் உள்ளனர். இத்தேர்தலில், 12,23,205 வாக்குகள் (85.1%) பதிவாகின.
திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் எஸ்.செந்தில்குமார் 5,74,988 வாக்குகள் பெற்று 70,753 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக அன்புமணி ராமதாஸ் 5,04,235 வாக்குகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட பழனியப்பன் 53,655 வாக்குகள் பெற்றார்.