ETV Bharat / state

நாளை வெளியாகிறது 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்..! - TN 11th Results 2024 - TN 11TH RESULTS 2024

TN 11th Results: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே.14) வெளியிடப்பட உள்ளதாக என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அறிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்கள் கோப்புப்படம்
பள்ளி மாணவர்கள் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 7:08 PM IST

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை, 3 ஆயிரத்து 302 மையங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரத்து 187 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களால் தனித்தேர்வர்களாக 4 ஆயிரத்து 945 பேரும், சிறைவாசிகள் 187 பேரும் எழுத அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்டத்தில் உள்ள 591 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரத்து 852 மாணவர்கள், 240 மையங்களில் தேர்வினை எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.

இது குறித்து, அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது.

தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in போன்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்ததேதியைப் பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது அளித்த செல்போன் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் விவகாரம்: திருச்சி சைபர் கிரைம் அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு ஆஜர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.