ETV Bharat / state

"துணை முதலமைச்சர் பொறுப்பை திருமாவளவனுக்கு கொடுத்திருக்கலாம்" - காடேஸ்வரா சுப்பிரமணியம்! - Kadeswara Subramaniam

மதுவை ஒழிப்பதாகச் சொன்ன திமுக இரட்டை வேடம் போட்டுக்கொண்டு வேறு வழியின்றி மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்த துணை முதலமைச்சர் பொறுப்பை திருமாவளவனுக்கு கொடுத்திருக்கலாம் எனவும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

காடேஸ்வரா சுப்பிரமணியம், திருமாவளவன்
காடேஸ்வரா சுப்பிரமணியம், திருமாவளவன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 9:27 AM IST

திருநெல்வேலி: நெல்லை பழைய பேட்டை பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்களின் இடங்களை வக்பு வாரிய சொத்து எனக் கூறி பத்திரப்பதிவு, மின் இணைப்பு பெறுவது, மாநகராட்சி வரி செலுத்துவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டு இருப்பதைக் கண்டித்து, இந்து முன்னணி மற்றும் பழைய பேட்டை அனைத்து சமுதாய மக்கள் சார்பில் நேற்று (அக்.3) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த காடேஸ்வரா சுப்பிரமணியம், "வக்பு வாரிய சொத்துக்கள் எனக் கூறி 100 ஆண்டுகளுக்கு மேல் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பத்திரப்பதிவு உள்ளிட்டவைகளை செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதேபோன்ற பிரச்சினை தமிழ்நாடு முழுவதும் வளர்ந்து வருவது கண்டிக்கத்தக்கது. அதனால், அரசு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும்.

திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வக்பு வாரிய சொத்துக்கள் என பிரச்சினைகள் இருந்து வருகிறது. மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர். மத்திய அரசு கொண்டுவரும் வக்பு வாரியச் சட்டத்தை அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: "மத்திய அரசு தான் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்" - டிகேஎஸ் இளங்கோவன் பேச்சு!

பூணூல் விவகாரம்: நெல்லை மாநகர் பகுதியில் இளைஞர் ஒருவரின் பூணூல் அறுத்த விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மனதில் பல்வேறு சிந்தனைகள் எழுந்து வருகிறது. உடனடியாக காவல்துறை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இதில் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும்.

துணை முதலமைச்சர் விவகாரம்: துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதைப் போல், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்கிறாரா? என பார்ப்போம். உதயநிதி நியமனம் வாரிசு அரசியலாகவே பார்க்கிறோம். திமுகவில் உதயநிதியை விட திறமையானவர்களாக துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் உள்ளனர். மது ஒழிப்பு மாநாடு நடத்தும் திருமாவளவனை இந்து முன்னணி பேரியக்கம் பாராட்டுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்ததற்குப் பதில், திருமாவளவனுக்கு கொடுத்திருக்கலாம்.

விசிக மாநாடு: மது ஒழிப்பு மாநாட்டிற்கு இந்து முன்னணி பேரியக்கத்தை அழைத்திருந்தால் நாங்களும் கலந்து கொண்டிருப்போம். மது ஒழிப்பு மாநாட்டில் திமுக கலந்து கொண்டிருப்பது இரட்டை வேடம், போலி வேடம். ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகள் அடைக்கப்படும் என தெரிவித்த அவர்கள், 1 சதவீதமாவது கடைகளை அப்புறப்படுத்திவிட்டு மாநாட்டில் கலந்து கொண்டிருக்கலாம்.

இந்த நிலையில், திமுக வேறு வழியின்றி மாநாட்டில் கலந்து கொண்டதைப் போல தான் தெரிகிறது. மது ஒழிப்பை படிப்படியாகக் கொண்டுவரும் முயற்சியாக கள்ளுக்கடைகளை திறக்கலாம். விவசாயிகள் பயன்பெறும் வகையில் கள்ளுக் கடைகளை திறக்கும் யோசனையை அரசு செய்தால் நன்றாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, பழைய பேட்டை பகுதியில் வக்பு வாரிய இடத்தில் வசிக்கும் பொதுமக்களுக்காக இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், வக்பு வாரிய சொத்துக்களை வக்பு வாரியத்திடமே திருப்பி வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி எஸ்பிஐ கட்சி சார்பில் அதே நேரத்தில், அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர்களுக்கு அனுமதி மறுத்து போலீசார் உத்தரவிட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.