ETV Bharat / state

சித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணபங்கள் வரவேற்பு! - MD Siddha Unani Admission open

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2024, 10:53 PM IST

MD Siddha MD Unani MD Homeopathy Admission: எம்.டி (சித்தா), எம்.டி (யுனானி) மற்றும் எம்.டி (ஓமியோபதி) போன்ற மருத்துவ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணபங்களை செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 20ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

அலோபதி மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் தொடர்பான கோப்புப்படம்
அலோபதி மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் தொடர்பான கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.டி. (சித்தா) மற்றும் எம்.டி. (யுனானி) மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும், சுயநிதி ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.டி. (ஓமியோபதி) மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புக்கு அரசிற்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்திற்குமான 2024 - 2025ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை பெறும் அனுமதி விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். அந்த விண்ணபங்களை பெறுவதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை கீழ் காணலாம்.

  • விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை “www.tnhealth.tn.gov.in” என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக தனித்தனியாக ஒவ்வொரு முதுநிலை பட்டப் படிப்பு அல்லது பிரிவிற்கும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • விண்ணப்பங்கள் இவ்வியக்குநரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்படமாட்டாது. மேலும், அடிப்படைத்தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு ” www.tnhealth.tn.gov.in ” என்ற வலைதள முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.
  • விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 20ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால் அல்லது கூரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்க செப்டம்பர் 20ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே கால அவகசாம் உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எம்.டி. (ஓமியோபதி) மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிக்கவேண்டிய முகவரி “செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600 106.”
  • தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்பெறும் இந்த முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு AIAPGET 2024இல் பெற்ற மதிப்பெண்களின் அடிபடையில் {எம்.டி. (சித்தா)- AIAPGET (Siddha) - 2024, எம்.டி. (யுனானி)-AIAPGET (Unani) - 2024, மற்றும் எம்.டி. (ஓமியோபதி) AIAPGET (Homoeopahty) - 2024} சேர்க்கை நடைபெறும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும் மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வரவேண்டும்.
  • கலந்தாய்வு தேதி, இடம் மற்றும் அனைத்து விவரங்களும் வலைதள முகவரி மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும்.
  • கலந்தாய்வு அன்று நேரில் வரத்தவறியவர்கள் தங்களது வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.
  • விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் விவரம்
விண்ணப்பக் கட்டணம் விவரம் (Credits- Directorate of Indian Medicine and Homeopathy Website)
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை எஸ்.பி.ஐ. (SBI) e-collect வாயிலாக மட்டுமே செலுத்தவேண்டும்.
  • கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், தபால் அல்லது கூரியர் சேவையினால் ஏற்படும் காலதாமதத்திற்கு தேர்வுக்குழு பொறுப்பாகாது என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: TNSET தேர்வு எப்போது? நெல்லை மனோன்மணியம் பல்கலை துணைவேந்தர் முக்கிய தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.