ETV Bharat / state

மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்! போலீசார் கூறுவது என்ன? - Death threats to Durai Dayanidhi - DEATH THREATS TO DURAI DAYANIDHI

Death threats to Durai Dayanidhi: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் வந்ததை அடுத்து மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

துரை தயாநிதி, பாதுகாப்பு பணியில் போலீசார்
துரை தயாநிதி, பாதுகாப்பு பணியில் போலீசார் (Credits - Dayanidhi X page, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 10:39 AM IST

வேலூர்: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேரனுமான துரை தயாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் 14ஆம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிஎம்சி மருத்துவமனையின் ஏ-பிளாக்கில் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வரும் அவருடன் அவரது தந்தை அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

அவர் சிகிச்சை பெற்று வரும் தளம் காவல் துறையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று (ஆக.10) வந்த ஒரு மின்னஞ்சலில் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் குறிப்பு இருந்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கிரண் ஸ்ருதிக்கு மின்னஞ்சல் வழியாகவே புகார் அனுப்பி வைக்கப்பட்டது.

மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரம், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை ஏ-பிளாக்குக்கு கூடுதலாக ஓர் உதவியாளர் தலைமையில் 3 காவலர்கள் சீருடை அணியாமல் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை தளத்துக்கு 3 காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அங்கு கூடுதலாக ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 பேர் அடங்கிய சீருடை அணியாத காவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு அவர்கள் பணியில் இருந்து ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதிக்கு, மருத்துவனை அலுவலக மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: துணை முதலமைச்சர் விவகாரம்; தந்தையே மகனை ட்ரோல் செய்தால் நாங்கள் என்ன செய்வது? - அண்ணாமலை கருத்து - annamalai about deputy cm issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.